மேஷம், ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. தங்கமான வாய்ப்பு.. ஒரு சில விஷயத்தில்
வார ராசி பலன்: வைகாசி 19 முதல் 25 ஆம் தேதி வரை, ஜூன் 2 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். கழுத்து சுழுக்கு, முதுகு வலி, கழிவுகளில் பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். எதிர்பார்க்காத நன்மைகள் உண்டாகும். பயணங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும். தேக ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை எல்லாம் எடுத்துக் கொள்வீர்கள். தொழிலை சரிப்படுத்துவீர்கள். ஆடிட்டரை பார்க்க வேண்டும், கன்சல்டிங் பார்க்க வேண்டும் என்பது போன்றவற்றை செய்து ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். நிறைய நன்மைகள் நடக்கும்.
முதலீடுகளுக்கு குறைவிருக்காது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கும். அவற்றில் எல்லாம் அடுத்தடுத்து அனுகூலம் ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை அடையும். வாகனங்கள், மனதிற்குப் பிடித்த விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். சுப காரியத் தடைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். எல்லாவற்றிலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பீர்கள். நிறைய பண முதலீடுகளை சரி செய்து கொள்வீர்கள். நிரந்தர வருமானத்துக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்வீர்கள். ஆவேசப்படாமல், உணர்ச்சிவசப் படாமல் இருந்தால் போதும். வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் ஆவேசப்படுவது, கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது.
பயணங்கள், திட்டமிட்ட விஷயங்கள் அனுகூலத்தை தரும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது, வாரத்திற்கு ஒருமுறை கோயிலுக்குச் செல்வது, தெய்வ வழிபாடு செய்வது, உறவினர் வீட்டுக்குச் செல்வது, பொருள்கள் வாங்கச் செல்வது நல்லது. குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்கலாம். மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை கொடுப்பார்கள். அரசுத் துறை, அரசியல்வாதிகள், வெளிநாட்டு அமைப்பு, வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அற்புத பலன்களைத் தரும். அனுமனை தொடர்ந்து வழிபட வழிபட நன்மையை ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமை மதியம்தோறும் எலுமிச்சை சாதம், எலுமிச்சை சாறு போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுத்து வந்தால் விரையங்கள் குறையும்.
தேவையில்லா மனக் குழப்பம், தேவையில்லாத சங்கடங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. சூரியன் ராசியில் இருப்பதால் நரம்பு சம்பந்தப்பட்ட, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சுளுக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பிடிப்புகள், பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. பழைய கடன்களை பைசல் செய்யும் முயற்சி வெற்றியை ஏற்படுத்தி தரும்.
நீண்ட நாட்களாக ஏதாவதொரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். அவை வைகாசி முடியும் வரை கண்டிப்பாக இருந்து கொண்டே தான் இருக்கும். அனுமன் சாலிஷா கேட்க கேட்க பாதிப்புகளில் இருந்து நிவர்த்தி ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள், பாதிப்புகள் படிப்படியாக நிவர்த்தி ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுவதால் வேலையை விடுகிறேன் என்று கூறிவிட்டு வருத்தப்படக் கூடிய சூழல் ஏற்படும். கணக்கு வழக்குகள், ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளில் பெரிதாக பாதிக்கப்படக் கூடியவர்களில் நீங்களும் ஒன்று.
வாகன அமைப்பு, தொழில் அமைப்பு, உத்தியோக அமைப்பு ஏற்றத்தைக் கொடுத்தாலும் மேலதிகாரிகளும், சட்டத்திற்கு உட்பட்ட விஷயத்தில் இல்லாதவர்களாலும் தொந்தரவுகள் காணப்படும். லீகல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications