தனுசு, மகரம் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் யாருக்கு.. இந்த வாரத்தில் ஏற்படப் போகும் சூப்பர் மாற்றம்
வார ராசி பலன்: வைகாசி 19 முதல் 25 ஆம் தேதி வரை, ஜூன் 2 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தீபமேற்றுவது விசேஷமான பலன்களைத் தரும். கோவிந்த நாமத்தை உச்சரித்து வந்தால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி, வெளியிடத்தில் சந்தோஷம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தொழில்
நல்ல வேலை ஆட்கள் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு அந்த கவலை நீங்கி நல்ல பணியாட்கள் கிடைப்பார்கள். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கி பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்து தொழில் தொடங்க நினைப்போர் இந்த காலத்தில் புதிதாக தொழில் தொடங்கலாம்.
மாற்றம்
உங்களின் வாழ்க்கை துணையால் ஆதாயம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். வீடு, உத்யோகம், தொழிலில் ஆகியவற்றில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் ஏற்படும். இந்த அனைத்து மாற்றங்களும் உங்கள் வாழ்க்கைக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.
பொறுமை
எதிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். வம்பு வழக்குகளில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் அவசரப்படாமல் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கை வேண்டும். கால், மூட்டு, முதுகு வலிகள், சளி, இருமல் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
அவ்வபோது மன குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. பிறர் குடும்பத்தில் உங்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குல தெய்வ வழிபாடு காரிய தடைகளை தவிடுபொடியாக்கி, எல்லாவற்றிலும் வெற்றியை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் திங்கள் கிழமை அருகில் உள்ள சிவாலயம் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும். சிவன் கோயிலில் உள்ள விநாயகர் வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை மதியம் அன்னதானம், எலுமிச்சை தானம் செய்வது வீண் விரயம் நீங்கி நல்ல பலன்கள் கொடுக்கும்.
புகழ்
உங்கள் வாக்குக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாரதாரத்தில் ஏற்றம் உண்டு. வீடு, நிலம், வண்டி, வாகனம், ஆபரணங்கள் என்று அடுத்தடுத்து அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பெயர், புகழ் அதிகரிக்கும்.
கவனம்
குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனத்தில் பயணிக்கும் போது மிகவும் எச்சரிக்கை அவசியம். நரம்பு, முதுகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணம், கொடுக்கல் வாங்கல் வேண்டவே வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனம் வேண்டும். வாக்குவாதம், கோபம் தவிர்க்க வேண்டும். பசுமாடுகளுக்கு புதன்கிழமை தோறும் உணவளிப்பதால் எதிரிகளின் பிரச்னையில் நல்ல தீர்வு காணப்படும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications