வார பலன்: கடகம், சிம்மம், கன்னி அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?.. நடக்கப்போகும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான (ஜூன் 9 முதல் 15) பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமைதோறும் தெய்வ வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். அலர்ஜி, விட்டமின் குறைபாடு, கால்சியம் குறைபாடு, மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதிக அளவில் விரையம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றபடி எல்லா விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். மன அழுத்தம், மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். தியானம், யோகா, உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும்.

நிறைய பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கும். ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நியாபக மறதி இருப்பதால் பணம் சார்ந்த விஷயங்களை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. சனிக்கிழமை தெய்வ வழிபாடு, பசுமாட்டுக்கு உணவளிப்பது, அன்னதானம் செய்வது அற்புதத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் இஷ்ட தெய்வம், குலதெய்வ வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஆனந்தம் ஏற்படும். வண்டி, வாகன மாற்றம் உண்டாகும். மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள். துணை, காதல் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

பெற்றோர் பெரியோர்களின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர், பெரியோருக்கும் உங்களுக்கும் இருந்த மனத் தாங்கல்கள் தீரும். படிப்படியாக தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், வியாபார ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷமான மனநிலை உண்டாகும். ரத்த அழுத்தம், சர்க்கரையால் மயக்கம் ஏற்படுவது போன்ற விஷயங்களில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வது, பசு மாடுகளுக்கு உணவளிப்பது, அன்னதானம் செய்வது நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும். அடிவயிறு சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அற்புதமான மாதமாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் அருமையான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும்.

நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உத்தியோகத்தில் அபரிமிதமான ஏற்றங்கள் உண்டாகும். அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பலரால் பாராட்டப்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெரிய அளவில் சந்தோஷம் ஏற்படும். புதிய உத்தியோகம், பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அருமையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+