கன்னிக்கு திடீர் ராஜயோகம்.. இனி தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்வது நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். மன அழுத்தத்தை நீக்கும். கோளார் பதிகத்தை சொல்லி வருவது அற்புதத்தை ஏற்படுத்தும். வீடு மாற்றம், இடமாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை, சளி, அலர்ஜி, கொரோனா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, விட்டமின் குறைபாடுகள் ஏற்படுவதால் தேவையில்லாத பதற்றம் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோக யோகமும், அனுகூலமும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
ஏற்றம், முன்னேற்றம்
இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்க்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடப்பது பெரிய நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில், உத்தியோகத்தில், வியாபாரத்தில், படிப்பில் செய்ய வேண்டிய மாற்றத்தை உடனடியாக செய்து கொள்வது நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
சுப விரைய பிராப்தம்
பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியை ஏற்படுத்தும். சொல்வாக்கும், செல்வாக்கும் கூடக்கூடிய நல்ல காலகட்டம். தனிப்பட்ட முறையில் பெரிய அளவுக்கு நிம்மதி, பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். சுப விரைய பிராப்தம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் காணப்பட்டாலும், அந்த செலவுகளுக்கு உண்டான எதிர்பார்த்த அமைப்பு கைகூடக் கூடிய அனுகூலமான அமைப்பாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம், சந்தோஷம் உண்டாகும்.
முதலீடுகள்
திட்டமிட்டு செய்யக்கூடிய அனைத்து விஷயங்களும் மிகப்பெரிய நம்பிக்கையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவது குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தும். முதலீடுகள் செய்யத் தொடங்குவீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகள் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
பண வரவு
பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும தீரும். மாற்றத்திற்கான நேரமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். முதலீடுகள் செய்வதில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். மனைவி, குழந்தைகள் விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். யோகமான காலகட்டமாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கி உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications