திடீர் அதிர்ஷ்டத்தால் வெற்றியை குவிக்கும் கும்பம்.. பணம் கொட்டும்.. சுறுசுறுப்பு முக்கியம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் திங்கள்கிழமையில் தெய்வ வழிபாடுகள் செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். அதுவும் சிவன் வழிபாடு நன்மையைத் தரும். தேக ஆரோக்கியத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிக கவனமாக இருப்பது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் திடீர் மன அழுத்தம் உண்டாகும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவன் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை மகிழ்ச்சியை உண்டாக்கும். படைப்பாளிகள், மீடியா துறையினர், வழக்கறிஞர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பெரும் வெற்றிகள், அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டம்
மனதிற்கு ஏற்ற மார்க்கம் உண்டாகும். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணம் மேற்கொள்வதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய அமைப்பை பெற்றுத் தரும்.
தொழில்
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதனால் ஆச்சரியப்படும் வகையில் வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் பெரிய நம்பிக்கை, அனுகூலம், சந்தோஷம் அடுத்தடுத்து நடக்கும். அனைத்து விதமான சுபகாரியத்தையும் இந்த காலகட்டங்களில் ஆரம்பித்தால் வரக்கூடிய நாட்களில் எல்லாவிதமான சந்தோஷம், அனுகூலம், லாபம் ஏற்படும்.
சுறுசுறுப்பு முக்கியம்
கும்ப ராசிக்காரர்கள் சோம்பலால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளதால் சுறுசுறுப்பாக இருப்பது நல்லது. சுறுசுறுப்பாக இருந்தால் எடுத்த காரியங்களில் ஜெயம், நம்பிக்கை ஏற்படும். ஏழரை சனி இருப்பதால் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நினைத்த காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்திலும், குடும்பத்திலும் பூதக் கண்ணாடி ஆராய்ச்சி செய்வதை தவிர்த்தல் நல்லது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications