மகர ராசிக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் யோகம்.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உணவு சார்ந்த விஷயங்களால் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. 3 ஆம் இடத்தில் இருக்கும் சனி உங்களுக்கு தைரியத்தையும், எந்தவொரு விஷயத்தையும் எடுத்து செய்யக்கூடிய வலிமை கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சனி பார்வை சுக்கிரன்மேல் இருப்பதால் அடுத்த ஒருமாதத்துக்கு குளிர் மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
முதல் பெண் குழந்தையில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சூரியன் புதனுடைய பார்வை இருப்பதால் தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில், அரசு சார்ந்த தொழில்களை செய்பவர்களுக்கும், கைமாற்றிவிடும் வேலை செய்பவர்களுக்கு நல்ல காலகட்டம்.
வெற்றி மேல் வெற்றி
நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தமான விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு விஷயங்களில் அக்கறை தேவை. பண வரவுக்கு எந்தவித குறையும் இருக்காது. பணவரவு அதிகரிக்கும்.
கோபம் வேண்டாம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக சரியாகும். ஆரோக்கியம், முதுகு தண்டவடம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அனந்த பத்மநாபர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். திங்கள்கிழமைகளில் அம்மன் வழிபாடு சகல விதத்தில் நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications