ஜாவா சுந்தரேசனாக மாறும் மகரம், கும்பம், மீனம் ராசியினர்.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான (ஜூன் 9 முதல் 15) பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு எல்லா விஷயங்களுமே வெற்றியையும், ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும். சூப்பர் டூப்பராக இருக்கப் போகிறது. பண வரவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். பழைய கடன்களை பைசல் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். திங்கள்கிழமை தெய்வ வழிபாடு செல்வது அற்புதமான நன்மைகளை ஏற்படுத்தும். பசு மாட்டிற்கு உணவளிப்பது, அன்னதானம் அளிப்பது அற்புதத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். காது மூக்கு தொண்டை, சைனஸ், பல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

சிவன் வழிபாடு செய்து வந்தால் அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். ஆச்சரியமான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி உண்டாகும். ஏற்றம் மிக்க காலமாக இருக்கும். பெரிய அளவு நம்பிக்கை உண்டாகும். அரசு கெளரவங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்து வருவது நன்மையை ஏற்படுத்தும். பசு மாடுகளுக்கு உணவளிப்பது, ஏழை எளியோருக்கு உணவு தானமாகக் கொடுப்பது நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும். கும்பத்துக்கு பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

பண வரவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். அனுகூலம் காணப்படும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். உடனிருக்கக் கூடிய பார்ட்னர்களால் அனுகூலம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமை மாறும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்து வந்த பாதிப்புகள் பனி போல நீங்கும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கால், பாதம், சுழுத்து, நகம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. யாருடனாவது பகை இருந்தால் சமாதானப்படுத்திக் கொள்வது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பல், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் புதனை வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும். ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவுகளிடத்தில் வாக்குவாதம் வைத்துக் கொள்பவர்களுக்கு தேவையில்லாத உபத்திரவம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும்.

எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். புதிய பொறுப்புகள் உங்களை வந்து சேரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயங்களில் நல்ல மாற்றமும், அனுகூலமும் ஏற்படும். பெற்றோர் பெரியோரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் தேக ஆரோக்கியம், வண்டி வாகத்தில் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது.

குலதெய்வத்தை மானசீகமாக தினந்தோறும் பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது. தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் வந்தால் சிதறு காய் உடைத்துவிட்டுச் செல்வது அனுகூலம், சந்தோஷம், ஏற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+