ஜாவா சுந்தரேஷனாக மாறும் சிம்மம், கன்னி ராசி.. அதிர்ஷ்டம் கூரையை பிச்சுகிட்டு கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: வைகாசி 19 முதல் 25 ஆம் தேதி வரை, ஜூன் 2 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-simmam-kanni-people-will-get-in-june-2-to-8-th

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் சிவாலயங்களுக்கு நல்லெண்ணெய் கொடுத்து வழிபடுவது அருமையான பலன்களையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். துணை உங்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்து கொடுப்பார். உங்கள் காதல் அமைப்பில் காதலன் அல்லது காதலி சொல்வதைக் கேட்பது நன்மை பயக்கும். பிள்ளைகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

திடீர் பயணங்களை மேற்கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். அஷ்டமத்தில் சனி இருப்பதால் தேவையற்ற மன அழுத்தம், பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் பதற்றமும், மன அழுத்தமும் குறையவே குறையாது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்

தேக ஆரோக்கியத்தில் கால், முதுகு, வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தூக்கமின்மை பெரிய பிரச்சனையாக இருக்கும். காதலர்கள், உங்கள் துணையால் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். அவர்கள் முன்னேற முன்னேற உங்களைத் தாங்கி பிடிப்பார்கள். அவர்கள் உங்களை ஒதுக்குவதாக நினைத்துக் கொண்டு சந்தேகப்பட்டு நல்ல உறவையோ, நட்பையோ இழந்து விடாமல் இருப்பது நல்லது.

தொழில் ரீதியாக ஏற்றமும், குடும்பத்தில் அனுகூலமும் ஏற்படும். பிள்ளைகளுடைய நீண்ட நாள் குறைகள் நிவர்த்தி ஆகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். லாபம், சந்தோஷம், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது என எல்லா நன்மைகளும் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தி தரும். கடன் அமைப்பை படிப்படியாகக் குறைப்பீர்கள். தெளிவான மனநிலையுடன் இருப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் கண்டிப்பாக வியாழக்கிழமை தோறும் ராகவேந்திரர் வழிபாடு, மகான்கள் வழிபாடு செய்வது மிகப்பெரிய மாற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும், அலர்ஜி, சுவாசக் கோளாறு கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். சளி தொடர்பான தொந்தரவுகளை மிக கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் சிறு சிறு தடைகள் காணப்பட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையைத் தவிர உணவுப் பொருள்கள் தானமாக கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது.

தொழில் ரீதியாக ஏற்றம், நம்பிக்கை, அனுகூலம் மிகப்பெரிய நம்பிக்கையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். புதிய தொழில், இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என மாற்றங்களுக்கு அடிக்கோல் இடக்கூடிய ராசிகளாக இருப்பீர்கள். வாகனத்தில் அனுகூலம் காணப்படும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

பத்தில் குரு இருந்தாலும் திருமண அமைப்பு, குழந்தை பாக்கியம் , நல்லது நடக்கும் அமைப்பு ஏற்படும். உறவுகளில் நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்கள் மீது அந்பு கொண்டவர்களை சந்திக்கக்கூடிய பிராப்தம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தெய்வ மார்க்க பயணங்களை மேற்கொள்வீர்கள். மலைக் கோயிலுக்குச் செல்லக் கூடிய பிராப்தம் ஏற்படும். கண்டிப்பாக 58 சக்தி சேத்திரங்கள், 108 திவ்ய தேசங்களுக்கு திட்டமிட்டுச் சென்று வருவீர்கள்.

வட்டி குறைந்து பழைய கடன்களை அடைப்பதற்கு உங்களுடைய முயற்சி வெற்றியை ஏற்படுத்தும். ஞான மார்க்கத்தையும், சந்தோஷ மார்க்கத்தையும் ஆத்ம ரீதியாக கொடுப்பதை கண் கூடாகப் பார்க்கலாம். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடியவர்களாக இருப்பீர்கள். டக்கென்று எடுக்கக்கூடிய முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+