துலாம், விருச்சிகம் அதிர்ஷ்டமும், ஆபத்தும் ஒரே ரூட்டுல வருது.. பண மழை கொட்டப் போகுது
வார ராசி பலன்: வைகாசி 19 முதல் 25 ஆம் தேதி வரை, ஜூன் 2 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகர் வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும். முருகர் சந்நிதானத்தில் 7 எலுமிச்சைபழத்தைக் கொடுத்து வழிபட்டு ஒரு எலுமிச்சையை வாங்கி வந்து அதனை சாறு பிழிந்து குடிப்பது நன்மை பயக்கும். நல்லெண்ணெய் தானமாகக் கொடுப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் கண், தலைவலி, கழுத்து, அலர்ஜி விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
எதில் கையெழுத்து போட்டாலும் அதனை படித்து விட்டுப் போடுவது நல்லது. மேலதிகாரிகளிடம் தர்க்கம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அண்டை அயலார் விஷயத்தில் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கும் அமைப்பு உண்டாகும். புதன்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது, மதியம் வேளைகளில் எலுமிச்சை சாதம், ஜூஸ் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாவது ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த சிறு சிறு தடைகள் அஷ்டமத்தில் இருக்கும் சூரியனால் ஏற்பட்டாலும் வருத்தப்பட வேண்டாம். ஜூலை 14 ஆம் தேதி முதல் மிகப்பெரிய அனுகூலம் கிடைக்கும்.
அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல், 90 ஆவது பாடலை படிப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதற்கு 90 ஆவது பாடலை படிக்க படிக்க மன அழுத்தம் தீரும். அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் யோக பலத்தை அதிக அளவில் பெறப் போகிறீர்கள். வெள்ளிக்கிழமையில் அருகில் இருக்கும் பார்வதி தேவிக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷத்தைக் கொடுக்கும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட கோளாறுகள் நிவர்த்தியாகும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல் நிலையையும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல் நிலையை அக்கறையுடன் பார்த்துக் கொள்வது நல்லது.
ஹிமோகுளோபின், ஹார்மோன் குறைபாடுகள், அசிடிட்டியை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. செவ்வாய் நீச்சம் பெற்றிருப்பதால் மன அழுத்தம், தேவையில்லாத குழப்பம் ஏற்படும். நீங்களாகவே கோபப்படுவது, சிரிப்பது, சமாதானமாவது போன்ற செயல்களைச் செய்வீர்கள். நல்ல தூக்கம் மிகவும் முக்கியமான அமைப்பாகும்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக சிறு சிறு தடைகள் இருந்தாலும் அந்த தடைகள் அனைத்தும் அனுமன் சாலிஷா கேட்க கேட்க அனுகூலத்தை ஏற்படுத்தும். ஜூலை 17 ஆம் தேதி வரை பொறுமையாக இருப்பது நல்லது. சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. 5 இல் உள்ள சனி வெச்சு செய்துவிடும் வாய்ப்புள்ளது. அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பது நல்லது. 7 இல் சூரியன் இருப்பதால் 90 ஆவது பாடலை படிப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications