சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது.. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல் 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-virgo-kanni-people-will-get-from-july-14th-to-20th

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

வெற்றி மேல் வெற்றி

உங்களுடைய சவால்கள் அனைத்திலும் ஜெயிக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். திடீர் மாற்றங்கள் கிடைக்கும். பாக்கிய ஸ்தாத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் கழிவுப் பாதையில் தொற்று, கர்ப்பப் பை சிறுநீரகத்தில் பிரச்சனைகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.

அரசு வேலை

தொழில் ஸ்தானத்தில் 10 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் அரசு வேலைகள் கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். லாபத்தில் புதனும் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். விரைய ஸ்தானத்தில் செவ்வாய், கேது இருப்பதால் இரவு நேரங்களில் கால் வலி, தசைப் பிடிப்பு, கால் எரிச்சல் வருவதற்கான வாய்ப்புள்ளது. இனிப்பு பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

நட்பை புதுப்பிப்பீர்கள்

சனி வக்கிரமடைவதால் பழைய உறவுகள், நட்புகளை புதுப்பிக்கக் கூடிய யோகம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் புதன் அமர்ந்துள்ளதால் சூரியன் பெயர்ச்சி அடைவதால் ஜூலை 16 முதல் 31 ஆம் தேதி வரை கவனமாக இருப்பது நல்லது. லாபத்தைக் கெடுப்பதற்கான வாய்ப்புள்ளது. எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு சார்ந்த விஷயங்கள், ஆவணங்கள் விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வழிபாடு

தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு அதிகரிக்கும் வியாழக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது நல்லது. அம்மன் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+