அடுத்த 1 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. மேஷம் டூ மீனம்.. 12 ராசிகளுக்கும் ஒரு வரி பலன்!
சென்னை: நேற்று தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில் அடுத்த 1 வருடத்திற்கு மேஷம் டூ மீனம் உள்ளிட்ட 12 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்கள்: பொருளாதார ரீதியான மாற்றம்; உங்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றத்தை இந்த புத்தாண்டு கொடுக்கும், நீங்கள் இத்தனை காலம் கடுமையான கடனில் இருந்தீர்கள், முக்கியமாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள், இனி அந்த பிரச்சனை இருக்காது.

ரிஷப ராசி பலன்கள்: எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். பொறுமையாக இருப்பதே உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் காக்கும். கஷ்டங்களின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும்.
மிதுன ராசி பலன்கள்: எல்லா மாற்றமும் வர கூடிய இந்த வருஷத்தில் கொஞ்சமும் அலட்சியமாக இருக்காதீர்கள், எதையும் பார்த்து பார்த்து செய்யுங்கள, , உங்களின் ஆரோக்கியம் சரியாகும். உடல் ரீதியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
கடகம் ராசி பலங்கள்: ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக வையுங்கள், அலுவலகங்களில் சில சமயங்களில் உங்களுக்கு அதீத பிரஷர் வரலாம்., அதனால் நீங்கள் தவறு கூட செய்யலாம், இதனை தவிர்க்க மிகவும் பொறுப்பாக செயல்படுங்கள்.
சிம்மம் ராசி பலன்கள்: வாகன விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன,, வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள், அதேபோல் கடலில், நீர் நிலைகளில் குளிக்கும் போது கவனமாக செல்லுங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம், சிலருக்கு நல்லது செய்கிறேன் என்று உதவி செய்ய சென்றால் கூட பிரச்சனையாக மாறிவிடும். சிக்குனா சில்லறை ஆகிவிடுவீர்கள். கவனம்.
கன்னி ராசி பலன்கள்: உங்களுக்கு பணம், பொருளாதாரம் உயரும். சினிமாவில் வாய்ப்புகள் வரும். உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
துலாம் ராசி பலன்கள்: இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்லதை விட கெட்டதையே கொஞ்சம் அதிகம் கொடுக்கும், கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு, இதற்கு முன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்தார் குரு, இப்போது 8ம் இடத்தில இருக்கிறார். துலாம் ராசிதாரர்களுக்கு பொதுவாகவே குரு பிரச்சனைகளை தரும்.
விருச்சிக ராசி பலன்கள்: வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம், இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நல்லதே நடக்க தொடங்கும்
தனுஷு ராசி பலன்கள்: நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
மகர ராசி பலன்கள்: இந்த புதிய ஆண்டில் மகர ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் : உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
கும்பம் ராசி பலன்கள்: அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும், உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது.
மீன ராசி பலன்கள்: புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications