தனுசுக்கு புது வீடு, புது கார் வாங்கும் யோகம்.. முயற்சிகளில் எல்லாம் ஜெயம்.. தொட்டது துலங்கும் காலம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

Sani vakra peyarchi palan Dhanusu lucky zodiac signs

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியா் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு 2க்கு உரியவர். தனத்தைக் கொடுக்கக் கூடியவர், குடும்பத்தை அமைத்துக் கொடுப்பவர், வாக்கு ஸ்தானத்தின் அதிபதி, முயற்சி ஸ்தானத்தின் அதிபதி. தற்போது 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தில் அமர்ந்துகொண்டு வக்கிரமாக சனி உங்களுக்கு பலனைக் கொடுக்கப் போகிறார். இதுவரை தனம் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பணப் பிரச்சனை நீங்கும்.

பிரச்சனைகள் நீங்கும்

குடும்பத்தில் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கும் வரும் காலகட்டமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நல்ல விஷயங்களைச் செய்வீர்கள். இழுத்தடித்துக் கொண்டிருந்த விஷயங்கள், மந்தமாக இருந்த விஷயங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பிக்கும். கடந்த காலத்தில் செய்ய முடியாமல் இருந்த விஷயங்களை எல்லாம் செய்து வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். தடைபட்டிருந்த பணம் அனைத்தும் திரும்பி வரும் சந்தர்ப்பம் உண்டாகும்.

முயற்சிகளில் வெற்றி

3 ஆம் அதிபதி சனி. முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை என்ற நிலை மாறும். மூன்று மாதங்களாக செய்ய முடியாத அனைத்து விஷயங்களையும் செய்து வெற்றி பெறுவீர்கள். முயற்சிகள் பலிக்கும். சகோதர, சகோதரி விஷயங்களில் இருந்து வந்த பிணக்கும் சரியாகும். பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படும்.

வீடு வாங்கும் யோகம்

சுக ஸ்தானத்தை சனி கெடுத்துக் கொண்டிருந்திருப்பார். அகம் சார்ந்த விஷயங்களில், உணர்வுகள், உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த தொந்தரவுகள் சரியாகும். அம்மாவின் உடல்நிலை, கருத்துவேறுபாடுகள் அனைத்தும் சரியாகும். வீடு அமைக்க முடியவில்லை, தடை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தியாகும். இனி டக்கென்று முடிவெடுத்து வீடு கட்டுவது, வீடு வாங்குவது போன்றவற்றை செய்வீர்கள்.

கடன் தீரும்

கடன், வம்பு, வழக்கை முடித்து வைக்கும் எண்ணம் தோன்றும். சோதனை, கஷ்டமான தன்மைகளில் இருந்து விடுதலை அடையும் யோகம் உண்டாகும். வேலைகளில் அனுபவித்து வந்த சிக்கல்களில் இருந்து விடுதலை பெறும் யோகம் உண்டாகும். வேலைக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கும். வேலை மாற்றம், இடமாற்றம், பதவி உயர்வால் சிறப்பு பெறும் காலகட்டமாக இருக்கும்.

குழப்பம் நீங்கும்

4 ஆம் இடத்தில் இருந்து சனி 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் குழப்பம், பிடிவாதம் அதிமாக இருக்கும். இனி பிடிவாத குணம் நீங்கும். தடைகள், தாமதம், குழப்பம், ஆரோக்கியத்தில் பிரச்சனை, சோம்பல் என அனைத்தும் நீங்கும். சமசப்தம பார்வையாக தொழிலைக் கெடுத்துக் கொண்டிருந்தார். இனி வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலுக்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முடிவுகளை எடுப்பதில் இருந்து வந்த தயக்கம், குழப்பம் மாறும்.

வெளிநாடு யோகம்

அதிகாரத் தன்மை இனி உங்களுக்கு நன்றாக இருக்கும். எந்த இடத்தில் எதைச் செய்ய வேண்டும் என்கிற அறிவு, புத்திசாலித்தனம் மெருகேற்றக்கூடிய காலகட்டம் அமையும். வெளிநாட்டு தொடர்புகள், வெளிநாட்டு வேலை, வெளிநாடு தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். அரசு சார்ந்த விஷயங்களில் நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+