For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவபெருமானின் ருத்ராட்சம் யார் அணிய முடியும்...பெண்கள் எப்போது ருத்ராட்சம் அணியலாம்

Google Oneindia Tamil News

ஒருவர் தொடர்ந்து ஏழு ஜென்மங்கள் புண்ணியங்கள் செய்து வந்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்திராட்சம்அணியும் பாக்கியம் கிடைக்கும் என்று சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.

சென்னை: வைணவ சமயத்தை தழுவி விஷ்ணுவை வழிபடுபவர்களுக்கு என ஏழு சின்னங்கள் உள்ளது போல், சைவ சமயத்தைத் தழுவி சிவபெருமான வழிபடுவோர் பின்பற்ற வேண்டிய சடங்குகள் என திருநீறு மற்றும் ருத்ராட்சம் அணிவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானின் ருத்ராட்சம் பற்றி அறிந்து கொள்வோம்.

Who can wear Lord Shivas Rudracham ... what are the benefits

உலகின் மிகப் பழமையான சமயம் இந்து சமயம் என்பது வெளிநாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து சொன்ன உண்மைக் கருத்து. முற்காலத்தில் இந்து சமயம் என்று பொதுவான ஒன்றாக இருந்தாலும், அத்வைதத் தத்துவத்தை தோற்றுவித்த ஆதிசங்கரர் என்னும் மகான் தான் இந்து சமயத்தை சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என்று ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தி முறைப்படுத்தி இந்துக்களுக்கு அளித்தார்.

ஆறுவகை சமயத்தாருக்கும் ஆறுவகையான சமயச் சின்னங்களையும், அவர்கள் பின்பற்ற வேண்டிய சமயச் சடங்குகளையும் முறைப்படுத்தி வழங்கினார். இதில் பொதுவாக இரண்டு சமயங்கள் முக்கியமானவை, அவற்றில் சைவம் மற்றும் வைணவம் தான்.

வைணவ சமயத்தை தழுவி விஷ்ணுவை வழிபடுபவர்களுக்கு என ஏழு சின்னங்கள் உள்ளது போல், சைவ சமயத்தைத் தழுவி சிவபெருமான வழிபடுவோர் பின்பற்ற வேண்டிய சடங்குகள் என திருநீறு மற்றும் ருத்ராட்சம் அணிவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் ருத்திராட்சம் என்பது சிவபெருமானின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

உத்திராட்ஷம் என்பதற்கு ருத்திராட்ஷம், கண்டிகை, தெய்வமணி, சிவமணி, கண்மணி என பல பேர்கள் உண்டு. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் 'தலையெலும் பப்புக் கொக்கிற சுக்கம்' என்று ருத்திராட்சம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ருத்திராட்சம் அணிவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒருவர் தொடர்ந்து ஏழு ஜென்மங்கள் புண்ணியங்கள் செய்து வந்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்திராட்சம்அணியும் பாக்கியம் கிடைக்கும் என்று சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.

ருத்திராட்ஷம் பிறந்த கதை சுவாரஸ்யமானது. திரிபுராசுரன் என்னும் பிரம்மனிடம் பெற்ற வரத்தைக் கொண்டு தேவர்களை துன்புறுத்திக்கொண்டிருந்தான். தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கையிலாயம் சென்று சிவபெருமான வேண்டிக்கொண்டனர். உடனே, தேவர்களின் சக்தியை ஒன்றினைத்து, மிகப்பெரிய வல்லமை படைத்த அகோரம் என்னும் ஆயுதம் ஒன்றை உருவாக்கினார். அப்போது சிவபெருமானுக்கு ஏற்பட்ட பேரிரக்கம் காரணத்தால், தன்னுடைய மூன்று கண்களையும் மூடினார். பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் பூமியில் விழுந்து ருத்திராட்ச மரமாக மாறியது. அந்த ருத்திராட்ஷ மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்திராட்சம் ஆகும்.

ஒன்று முதல் இருபத்தி ஏழு முகங்கள் கொண்ட ருத்திராட்ஷத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானலும் அணியலாம். பெண்கள் அணிவதற்கு சில வரையறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அணிந்து கொள்வது நலம்.

ருத்திராட்சம் அணிபவர்கள் அதை வாரத்திற்கு ஒரு முறை முறையாக பூஜை செய்து பின்பு அணிந்து கொள்வது உத்தமம். குறிப்பாக பிரதோஷம் அல்லது சிவபெருமானக்கு பிடித்த நாளான திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நலம். ஒரு சுத்தமான தாம்பூலத் தட்டில், ஒரு வெற்றிலையை வைத்து அதன் மீது உத்திராட்ஷத்தை வைத்து, சந்தனம், பன்னீர், விபூதி, பால், வில்வம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அபிஷேகம் செய்வதற்கு முன்பு உத்திராட்ஷத்தை ஒரு நாள் முழுக்க சுத்தமான பாலில் ஊற வைத்து, அதன் பின்பு முறையாக பூஜை செய்து அணிந்து கொண்டால், நேர்மறை சக்திகள் நமக்கு கிடைக்கும்.

ருத்திராட்சத்தை, அதிக பிரயாணம் மேற்கொள்பவர்கள், பல்வேறு இடங்களில் சாப்பிட்டு, தூங்குபவர்களுக்கு அவர்களின் சக்தியின் பாதுகாப்புக் கூடாக இருந்து ஒரு நல்ல உறுதுணையாக இருக்கும். இது துஷ்ட சக்திகளுக்கு எதிராக செயல்படும் தன்மையுடையது. சிலர் தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்க தீய சக்திகளை பயன்படுத்துவதுண்டு. அந்த சமயத்தில் ருத்திராட்சம் பாதுகாப்புக் கவசமாக மாறி காப்பாற்றும்.

English summary
Mahasivarathiri Rudracham special: (மகாசிவராத்திரி ருத்ராட்சம் சிறப்புகள்) Just as there are seven symbols for those who embrace Vaishnavism and worship Vishnu, the wearing of Tiruneeru and Rudratsam is seen as important as the rituals to be followed by the great worshipers of Shiva who embrace Vaishnavism. Let us learn about Lord Shiva's Rudracham on the day of Mahasivarathri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X