Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக உணவு நாள்: பசியில் தவிக்கும் பலர்... உணவை வீணாக்காமல் சாப்பிடுபவர்கள் யார் தெரியுமா

உணவு எல்லோருக்கும் கிடைத்து பசியாற வேண்டும் என்பதற்காகவே இன்று உலக உணவு நாள் கொண்டாடுகின்றனர். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் உணவை வீணாக்காமல் சாப்பிடுவார்கள் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் பலர் பசியால் வாடிக்கொண்டிருக்க ஏராளமானோர் தங்களுக்கு கிடைக்கும் உணவை சரியாக சாப்பிடாமல் வீணாக்குகின்றனர். இந்த ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது. உணவு எல்லோருக்கும் கிடைத்து பசியின்றி இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று உலக உணவு நாள் கொண்டாடுகின்றனர். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் உணவை வீணாக்காமல் சாப்பிடுவார்கள் என்று பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவுதான் கடவுள். பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எந்த உயிரினமாக இருந்தாலும் சரி அதற்கு உணவு கொடுப்பது புண்ணியம். உலக உயிர்கள் அனைத்திற்கு உணவு கிடைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உணவு தினமாக கொண்டாடுகின்றனர்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் பல கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 20 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 101-வது இடத்தைப் பிடித்துள்ளது.

வறுமையின் பிடியில் இந்தியா

வறுமையின் பிடியில் இந்தியா

பட்டினி கொடூரம் மிக அதிகமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், 107 நாடுகளில் இந்தியாவுக்கு 94வது இடம் கிடைத்தது. ஒரே ஆண்டில் 7 இடங்கள் சரிந்துள்ளதால், கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே உலகளாவிய பசி குறியீட்டில் மோசமான இடத்தைப் பிடித்துள்ளன. சோமாலியா, ஏமன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு. மடகாஸ்கர், லைபீரியா, ஹைட்டி, தைமூர் லெஸ்டி, சியாரா லியோன், மோசாம்பிக், காங்கோ, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கியுள்ளன. உலக அளவில் சோமாலியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு பட்டினி குறியீடு 50 புள்ளி 8 ஆக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என கணக்கிடப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் 92வது இடத்திலும் நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகியவை 76 வது இடத்திலும் உள்ளன.

உணவு கிடைக்க வேண்டும்

உணவு கிடைக்க வேண்டும்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் தொடங்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு ஐநா சபையின் 20வது பொது மாநாட்டில் அக்டோபர் 16ஆம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. 40 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.

வீணாகும் உணவு

வீணாகும் உணவு

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள்.உணவை வீணாக்காமல் இருந்தாலே பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும்.
எப்போதும் வீட்டிலிருக்கும் வரை நமக்கு நம் அன்னையிடும் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வேலைக்காகவோ படிப்பிற்காகவோ வெளியூர் சென்று தங்க நேர்ந்தால் வீட்டு சாப்பாட்டின் அருமையும் அம்மாவின் பெருமையும் தெரியும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்களாம்.

தேவையான உணவு

தேவையான உணவு

ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்களை வீணாக்குவார்களாம். ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டாம் வீட்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகளையும், பழங்களையும் வீணடிப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான, காரமான சாப்பாடு வகைகளைக் கூட வீணாக்கி விடுவார். ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுப கிரகத்தின் தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். மேலும் தேவைக்கு அதிகமாக நொறுக்கு தீனிகளை வாங்கி வீணடிப்பார்கள்.

மேஷம், விருச்சிகம்

மேஷம், விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள், உணவை சூடாகவும் சுவையாகவும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் வேகமாக சாப்பிட்டு விடுவார்கள். இனிப்பு, துவர்ப்பு காரமான உணவுகள் ரொம்ப பிடிக்கும். அதே போல செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் பசிக்காக சாப்பிடுவார்கள். சூடாகவும் அதே நேரம் துவர்ப்பு சுவையுள்ள உணவும் ரொம்ப பிடிக்குமாம்.

ரிஷபம், துலாம்

ரிஷபம், துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் அறுசுவை உணவுகளையும் ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிடுவார்கள். இனிப்பு, உவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்குமாம். துலாம் ராசிக்காரர்களும் உணவுக்கு மரியாதை கொடுப்பார்கள். உணவை வீணாக்க மாட்டார்கள். பழைய உணவைக்கூட பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். ஊறுகாய், காரமான உணவுகள் பிடிக்கும். இனிப்பு துவர்ப்பு ரொம்ப பிடிக்கும்.

மிதுனம், கன்னி

மிதுனம், கன்னி

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இனிப்பு, துவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்கும் குடும்பத்தோடு சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு இனிப்பு துவர்ப்பு பிடிக்கும். அதுவும் தனியாகத்தான் சாப்பிடுவார்கள். இவர்கள் தான் தின்னி தனிக்காட்டு ராஜாக்கள்.

கடகம், சிம்மம்

கடகம், சிம்மம்

கடக ராசிக்காரர்கள் ரொம்ப டேஸ்டா ஹைஜீனிக்காக சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டில் சமைத்து சுடச்சுட சாப்பிடுவார்கள். பக்கத்தில் தண்ணீர்பாட்டில் ரெடியாக இருக்க வேண்டும் அப்போதான் உணவு உள்ளே இறங்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் வெரைட்டியாக சாப்பிடுவார்கள். ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் ரொம்ப டேஸ்ட்டா இருக்குப்பா என்று பாராட்டிக்கொண்டே சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சூடாகவும் காரகமாகவும் சாப்பிடுவார்கள். ஊறுகாய் ரொம்ப பிடிக்கும்.

 மகரம், கும்பம்

மகரம், கும்பம்

மகரம் ராசிக்காரர்களுக்கும் கசப்பு ரொம்ப பிடிக்கும். நன்றாக பசித்த பின்னர் வேகமாக மென்று சாப்பிடுவார்கள். உணவை வீணாக்கமாட்டார்கள். பழைய உணவு கூட ரொம்ப பிடிக்கும். கும்பம் ராசிக்காரர்களுக்கு பல ஊர் உணவுகள் ரொம்ப பிடிக்கும் தேடி தேடி ருசியாக சாப்பிடுவார்கள். உண்ட மயக்கம் அப்படியே ரெஸ்ட் எடுப்பது பிடிக்கும். அறுசுவையும் அற்புதமாக சரி சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

தனுசு, மீனம்

தனுசு, மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு கசப்பு ரொம்ப பிடிக்கும். நன்றாக பசித்த பின்னர் வேகமாக மென்று சாப்பிடுவார்கள். காய்கறிகள், கீரை, பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்கள் சூடாக சாப்பிடுவார். வேகமாக சாப்பிடுவார். காரம், இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு ரொம்பவே பிடிக்கும்.

பசியின்றி வாழ பரிகாரம்

பசியின்றி வாழ பரிகாரம்

உணவுப்பொருட்களைக் குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும். அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்குத் தேவையான சந்திரனின் காரகம் பெற்ற பச்சரிசி வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்கு சாப்பிட உணவு கொடுப்பது பரிகாரமாகும். சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்துப் படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும். பசியின்றி வாழலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+