ஜனநாயகன் படம் வரும்போது விஜய் இதை சொல்லுவாரா? ப்ளூ சட்டை மாறன் ரோஸ்ட்.. வம்புக்கு வந்த ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய் நேற்று நடந்த கூட்டத்தில் பேசும்போது, நான் ஒரு பைசாவும் தொட மாட்டேன், எனக்கு அது தேவையில்லை.. ஒரு துளி கறை படியாது என்று பேசி இருந்தார். அது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதுகுறித்து ஒரு போஸ்ட் வெளியிட்டு விஜயை கலாய்த்து இருக்கிறார். அதற்கு விஜயின் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
அரசியலுக்கு வந்ததுக்கப்புறமும் சரி... நாளைக்கு அதிகாரத்துக்கு வந்ததுக்கப்புறமும் சரி... இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இப்ப இருக்கறவங்க மாதிரியோ நான் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசாவும் தொட மாட்டேன். எனக்கு அது தேவையே இல்லை. ஒரு துளி கூட கறை படியாது..
இந்த வார்த்தைகள்தான் நேற்று நடந்த தவெக (தமிழக வெற்றி கழகம்) நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியது. அரசியலுக்கு வந்த பிறகு விஜய் பேசும் பேச்சுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த உரை நேரடியாகவும், உறுதியாகவும் இருந்ததுன்னு சொல்லலாம்.

'விசில்' சின்னத்தோட அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் விஜய், இந்த பேச்சு மூலம் தன்னோட அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக சொல்ல முயற்சி செய்திருக்கார். 'நான் சிஸ்டம்ல இருக்கறவங்க மாதிரி இல்ல'ன்னு சொல்ற ஒரு முயற்சியா தான் இதை அவரது ஆதரவாளர்கள் பார்க்குறாங்க.
ஆனா, விஜயின் இந்த உரை வெளியான சில மணி நேரங்களிலேயே, அது அரசியல் விவாதமா மாற ஆரம்பிச்சுடுச்சு. குறிப்பாக, பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்த பேச்சை தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்து, வழக்கம்போல கடுமையான கேள்விகளோட ஒரு கலாய்ப்பு பதிவை போட்டு இருக்கார்.
'நீ நேரடியா ஊழல் செய்யாவிட்டாலும், ஊழல் நடக்குறதை வேடிக்கை பார்த்து அமைதியா இருப்பதும் ஊழல்தான். இத்தனை ஆண்டுகள்ல ஒருமுறையாவது, "என் ரசிகர்கள் பிளாக்கில் டிக்கெட் வாங்கவோ விற்கவோ கூடாது"ன்னு விஜய் சொன்னாரா? ஜனநாயகன் படம் வரும்போது இதை சொல்ல தைரியம் இருக்குமா?'ன்னு அவர் கேள்வி எழுப்பியிருக்கார்.
இந்த பதிவு வெளியானதும், விஜய் அரசியல் பேச்சு ஒரு பக்கம் போக, சமூக வலைதளங்களில் வேற லெவல் மோதல் ஆரம்பிச்சுடுச்சு. ப்ளூ சட்டை மாறன் திமுக ஆதரவாளர் என்பதால், 'விஜயை குறிவைத்து தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்'ன்னு பலரும் குற்றம் சாட்ட ஆரம்பிச்சாங்க.
அதற்குப் பதிலடி கொடுக்க விஜய் ரசிகர்கள் ஒரு நிமிஷம் கூட தாமதிக்கல. 'ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் படங்களை இப்படி விமர்சிக்க உனக்கு தைரியம் இருக்கா?' 'ஒருபக்கம் மட்டும் நியாயம் பேசுறது தான் உண்மையான விமர்சனமா?' அப்படின்னு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை சமூக வலைதளங்களில் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்ப ஆரம்பிச்சிருக்காங்க.
இதன் மூலம், விஜயின் அரசியல் பயணம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே, அவருடைய ஒவ்வொரு பேச்சும் இனிமேல் வெறும் அரசியல் கருத்தா இல்ல... சினிமா, ரசிகர்கள், பழைய சர்ச்சைகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய விவாதமாக மாறுது என்பதையே இது காட்டுது.
ஒரு பக்கம், 'விஜய் ஊழல் விஷயத்துல தெளிவான நிலைப்பாடு எடுத்திருக்கார்'ன்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க. இன்னொரு பக்கம், 'சினிமா காலத்துல நடந்த விஷயங்களுக்கு முதல்ல பதில் சொல்லாம அரசியல் நம்பகத்தன்மை உருவாகுமா?'ன்னு விமர்சகர்கள் கேள்வி எழுப்புறாங்க.
மொத்தத்துல, விசில் சின்னத்தோட அரசியல் களத்தில் இறங்கிய விஜய், இனிமேல் ஒரு நடிகர் மட்டும் இல்ல. அவர் பேசுறதும், பேசாம இருக்குறதும் கூட அரசியல் அர்த்தம் பெறப்போகுது. அதுக்கான ஆரம்ப சத்தம்தான் இந்த விஜய் - ப்ளூ சட்டை மாறன் மோதல். வரப்போகும் நாட்கள்ல, இது இன்னும் பெரிய அரசியல் விவாதமா மாற வாய்ப்பு இருக்கு என்பதைத்தான் அரசியல் வட்டாரங்கள் சொல்லுது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
"விஜய் ஜெயிச்சிட்டாரு... அடுத்து?" - தனுஷை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்! கஸ்தூரி ராஜா பேச்சால் கிளம்பிய சர்ச்சை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications