ஆதவ் வாயை கட்டுங்க விஜய் இல்லன்னா பிரச்சனை..! எச்சரிக்கை விடுத்த ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி சர்ச்சையில் புதிய திருப்பம்
சென்னை: ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து கிளப்பிய சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், தற்போது ரஜினி அதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவுகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை பேச்சு
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால் திமுகவின் அழுத்தம் வந்ததால் பின்வாங்கினார். ஆனால் விஜய் அப்படி இல்லை" என்று கூறினார். இந்த பேச்சு வெளியானதும் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
அரசியல் - திரையுலகம் சேர்ந்து எதிர்ப்பு
இந்த கருத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் குரல் கொடுத்தனர். ரஜினி ரசிகர்கள், "இந்த மாதிரி பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது" ரஜினி கொரோனா காலகட்டம் என்பது தன்னால் யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது என்று தான் முடிவை மாற்றினார், ஆனால் அவர் கோழை என்பது போல இவங்க பேசுறது தப்பு என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ரஜினியின் அமைதியான பதில்
இந்த சர்ச்சைக்கு பதிலாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில், தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்று குறிப்பிட்டார். இந்த ஒரு வரி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில், "இதுதான் காக்கா vs கழுகு சண்டை 2.0 என்று பதிவு செய்துள்ளார். இந்த ஒரு வரி தான் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
விஜய்க்கு நேரடி எச்சரிக்கை
அதோடு நின்றுவிடாமல், "ஆதவ் அர்ஜுனாவின் வாயை கட்டுப்படுத்தவில்லை என்றால், இப்படியான சிக்கல்கள் தொடர்ந்து வரும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்த விவகாரம் நேரடியாக விஜய் பக்கம் திரும்பியுள்ளது.
புதிய விவாதம் தீவிரம்
ப்ளூ சட்டை மாறனின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு தரப்பு - அவர் சொல்வது சரி என்று ஆதரவு மற்றொரு தரப்பு - தேவையில்லாத விமர்சனம் என்று எதிர்ப்பு என்று கருத்துக்கள் பிரிந்துள்ளன.
ஆதவ் அர்ஜுனா பேச்சால் தொடங்கிய இந்த சர்ச்சை, இப்போது பலரின் கருத்துகளால் மேலும் பெரிதாகி வருகிறது. இதில் விஜய் நேரடியாக தலையிடுவாரா? அல்லது இந்த விவகாரம் மேலும் நீளுமா? என்பதே தற்போது அனைவரும் கவனித்து பார்க்கும் கேள்வியாக உள்ளது.
காக்கா vs கழுகு சண்டை 2.0 pic.twitter.com/0mRX0pONKA
— Blue Sattai Maran (@tamiltalkies) March 17, 2026
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications