ஜனநாயகன் விஷயத்தில் நடந்தது இதுதான்! எல்லாமே வதந்தி! ஓபனாக உடைத்த ஜீ5 கௌஷிக்
சென்னை: நடிகர் விஜய் நடித்த "ஜன நாயகன்" திரைப்படம், ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் இந்தப் படம் அதிக கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய சர்ச்சைகளுக்கு ஜி5 கௌதம் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

ஜனநாயகன் படத்தின் எதிர்பார்ப்பு
இந்தப் படம், ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக இல்லாமல், அரசியல் பின்னணியுடன் கூடிய கதையாக இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே பேசப்பட்டது. குறிப்பாக, விஜயின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படைப்பாக கருதப்பட்டது.
ஜனநாயகன் ரிலீஸ்
முதலில், "ஜன நாயகன்" திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிப் போனது. குறிப்பாக, சென்சார் தொடர்பான சிக்கல்கள் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. சில காட்சிகள் குறித்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, படம் சென்சார் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த விவகாரம் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஜனநாயகன் ஓடிடி அப்டேட்
இதற்கிடையில், இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை Amazon Prime Video நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் பரவின. படம் திட்டமிட்டபடி வெளியாகாததால், தயாரிப்பு தரப்பிற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், ஓடிடி வெளியீடும் சந்தேகத்துக்குள்ளானது என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவின. எனினும், இந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதி எதுவும் வெளியிடப்படவில்லை.
ஜி5 கௌஷிக் விளக்கம்
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் ஜி5 கௌஷிக் சமீபத்தில் நடைபெற்ற "காக்கி சர்க்கஸ்" பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அவர் கூறியதாவது, "படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி இன்னும் உறுதியாகவில்லை. அதனால், ஓடிடி வெளியீடு குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. படம் வெளியான பிறகே இதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், படத்தின் தாமதத்தால் ஓடிடி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் படம் பார்க்க வேண்டும் என சென்சார் குழு பரிந்துரைத்ததாகவும் பரவி வரும் தகவல்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது
தற்போதைய நிலவரப்படி, இந்த மாதத்தில் படம் வெளியாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது. மே அல்லது ஜூலை மாதங்களில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கான இறுதி அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
மொத்தத்தில், "ஜன நாயகன்" திரைப்படம் வெளியீட்டு தாமதம், சென்சார் சிக்கல்கள், ஓடிடி வதந்திகள் போன்ற பல காரணங்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. படம் எப்போது வெளியாகும், வெளியான பிறகு இந்த சர்ச்சைகளுக்கு எப்படி பதிலளிக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications