Madhampatti Rangarajan: மாதம்பட்டி ரங்கராஜனின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா.. பதிவில் குமுறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜாய் கிரிஸில்டா அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். இன்று மாதம்பட்டி ரங்கராஜன் தன்னுடைய முதல் மனைவியோடு நடிகர் ஷாருக்கானை நேரில் சந்தித்து இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அதை தொடர்ந்து இப்போது ஜாய் மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

2025 ஆம் ஆண்டில் கடைசி நாளுக்கு வந்து விட்டோம். இந்த வருடத்தில் சினிமா துறையில் சில பரபரப்பான சம்பவங்களும் நடந்தது. அதிலும் மாதம்பட்டி ரங்கராஜன் குடும்ப பிரச்சனை சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜன் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பே அவர் மாதம்பட்டி சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார்.

Madhampatti Rangarajan vijay tv Cook With Comali

அதுபோல தன்னுடைய ரெஸ்டாரென்ட் மூலமாக பிரபலங்கள் வீட்டில் விசேஷங்களுக்கு சமைத்து வீடியோக்களை வெளியிட்டும் இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமும் சின்னத்திரையில் பிரபலமானார். இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் லவ்வர்ஸ் டே அதுவுமாக மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு கொடுத்த கிப்ட் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சில புகைப்படங்களை வெளியிட அது பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி ஸ்ருதி ரங்கராஜன் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனாலும் சில மாதங்களிலேயே ஜாய் கிரிஸில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் திருமணம் நடந்து விட்டது என்று சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதோடு தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் பகிர்ந்து இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதற்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாய் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜாய் உடன் ஏற்பட்ட திருமணம் மிரட்டலின் பேரில் நடந்ததாகவும், ஜாய்யின் குழந்தைக்கு தான் அப்பா என்று நிரூபித்தால் அந்த குழந்தைக்கு செலவுகளை தன்னுடைய ஆயுள் முழுக்க கவனித்துக் கொள்வதாகவும் மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அறிக்கை வெளியிட்டு மாதங்கள் கடந்த பிறகும் டிஎன்ஏ டெஸ்ட்க்கு மாதம்பட்டி ரங்கராஜன் வரவில்லை என்று ஜாய் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு அவரை கலாய்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாதம்பட்டி ரங்கராஜன், நடிகர் ஷாருக்கானை தன்னுடைய குடும்பத்தோடு சென்று சந்தித்த வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் மாதம்பட்டி ரங்கராஜன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜாய் பகிர்ந்து இருந்தார். அது காலையில் சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது. இப்போது அதைத்தொடர்ந்து ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜன் ஜாய் மீது கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பது போல பேசி இருக்கிறார்.

மேலும் அந்த பதிவில் "ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைத்து ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கைவிட்டவன் ஆண் அல்ல.. ஒரு குழந்தைக்கு பெயர் கொடுக்க தைரியம் இல்லாதவன் தந்தை என்ற உண்மையை விட்டு ஓட முடியாது.. 2026ல பல சர்ப்ரைஸ் இருக்கு வெயிட்டிங்! என்று ஜாய் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+