Mankatha Box Office: பிரமிக்க வைத்த மங்காத்தா மூன்றாவது நாள் வசூல்.. அசத்தும் அஜித் ஃபேன்ஸ்
சென்னை: இந்த நேரத்துல தமிழ் சினிமாவுக்கே ஒரு வித்தியாசமான கட்டம் நடந்து கொண்டிருக்குது. முன்னணி நடிகர்களோட பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத சூழலில், புதுசா வர்ற படங்களும் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க முடியாம தடுமாறிக்கிட்டு இருக்கு. அப்படிப்பட்ட நேரத்துல தான், ரீ ரிலீஸ் படங்களே தியேட்டர்களுக்கு உயிர் ஊத்துற மாதிரி மாறி இருக்குது.
அந்த ரீ ரிலீஸ் வரிசையிலேயே இந்த ஆண்டு முழுக்க அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய படம் அஜித் குமாரின் மங்காத்தா. படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்தே சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரம்பிச்சுடுச்சு. 'மங்காத்தா இஸ் பாக்', 'இது படம் இல்லை... ஒரு விழா'ன்னு டிரெண்ட் எல்லாம் ஓடியது.

ரசிகர்கள் அலப்பறை
பொதுவா வீட்டுல டிவியில படம் பார்க்கும் போது சத்தம் கூட அதிகமா வைக்காத ரசிகர்கள், தியேட்டருக்கு வந்தா முற்றிலும் வேற மாதிரி மாறுறாங்க. விசில், சவுண்ட், கட் அவுட் பால் அபிஷேகம், பட்டாசு-எல்லாம் சேர்ந்து தியேட்டர்களை தீபாவளி பண்டிகை மாதிரி மாற்றி இருக்குது. குறிப்பாக முதல் காட்சி, முதல் நாள் ஷோக்களில் மங்காத்தா படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஒரு புதிய பட ரிலீஸ் அளவுக்கே இருந்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.
மங்காத்தா ரீ ரிலீஸ்
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான மங்காத்தா, ரிலீஸ் ஆன போதே அஜித் குமாரின் கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம். அந்த மாஸ் வேடம், ட்விஸ்ட் நிறைந்த கதை, கிளைமாக்ஸ்-all time favourite ஆக ரசிகர்களை இப்பவும் கட்டிப்போட்டிருக்கு. அதனால தான், இத்தனை வருடங்களுக்கு பிறகும் ரீ ரிலீஸில் இப்படியொரு வரவேற்பு கிடைக்குது.
மங்காத்தா மூன்றாவது நாள் வசூல் நிலவரம்
வசூல் விஷயத்துக்கு வந்தா, ரீ ரிலீஸ் என்ற வார்த்தைக்கே ஒரு புதிய அர்த்தம் கொடுத்திருக்கு மங்காத்தா. முதல் நாளில் 3.75 கோடி ரூபாய், இரண்டாவது நாளான சனிக்கிழமை 2.75 கோடி ரூபாய், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வசூல் செய்து, மூன்று நாட்களிலேயே 10.25 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்குது. இது பல புதிய படங்கள் கூட எட்ட முடியாத எண்ணிக்கைன்னு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கில்லி vs மங்காத்தா
கடந்த ஆண்டு விஜய்யின் கில்லி, சச்சின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வசூலை பெற்ற நிலையில், அந்த பட்டியலில் இப்போது மங்காத்தாவும் உறுதியாக இடம் பிடிச்சுடுச்சு. குறிப்பாக, சமீபத்தில் வெளியான சில புதிய படங்கள் 1 கோடி வசூலையே எட்ட முடியாமல் தோல்வியை சந்திச்ச நிலையில், மங்காத்தா கொடுத்த இந்த வசூல், தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்குது.
"இந்த ஜனவரி மாதத்துல தியேட்டர்களை உண்மையிலேயே காப்பாத்த படம் ஒன்னு இருக்குன்னா அது மங்காத்தா தான்"ன்னு தியேட்டர் வட்டாரங்களில் வெளிப்படையாக பேசப்படுது. குடியரசு தின விடுமுறையும் தொடர்ந்து வருவதால், வரக்கூடிய நாட்களிலும் மங்காத்தா வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மொத்தத்துல, புதிய படங்கள் தடுமாறும் இந்த காலகட்டத்துல, ஒரு பழைய படம் இப்படி மீண்டும் வந்து தியேட்டர்களை நிரப்புவது தான், மங்காத்தா செய்த மிகப்பெரிய சாதனையா பார்க்கப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications