Parasakthi 2nd day Box Office: ட்ரோலில் சிக்கிய பராசக்தி, ஆனால் 2 நாள் வசூல் இத்தனை கோடி! சிவகார்த்திகேயனுக்கு சவால்
சென்னை: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளியான பராசக்தி திரைப்படம், வெளியான முதல் இரண்டு நாட்களில் வசூல் ரீதியாக நல்ல தொடக்கத்தை பெற்றாலும், திங்கட்கிழமையுடன் சேர்ந்து எதிர்பாராத திருப்பத்தை சந்தித்து வருகிறது.
படம் வெளியான சனிக்கிழமை அன்று உலகளவில் ரூ.27 கோடி வசூல் செய்ததாக டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், சாக்னிக் தரவுகளின்படி, இந்தியாவில் முதல் நாளில் ரூ.12.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று வசூல் சற்று சரிந்து, ரூ.10.15 கோடி மட்டுமே (Early Estimates) கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களில் உலகளவில் 40-45 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கணிக்கப்படுகிறது. "இன்னும் ஒரு நாள் போனால் 50 கோடி தாண்டிடும்" என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால்...
திங்கட்கிழமையான இன்று தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் நிலவரம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புக் மை ஷோவில் சிவப்பு, மஞ்சள் எல்லாம் போய், வெறும் "பச்சை நிற" சீட்டுகளே அதிகம் தெரிகிறது. "இது பசுமை புரட்சி இல்லை... பாக்ஸ் ஆபீஸ் அமைதி" என்று சமூக வலைதளங்களில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
கலவையான விமர்சனங்கள்
பராசக்தி படம் தாய் மொழி, இரு மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று-அரசியல் படமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஒரு தரப்பு ரசிகர்கள், "உணர்வுப்பூர்வமான கதை, சிவகார்த்திகேயனின் முயற்சி பாராட்டத்தக்கது" என்று கை தட்டுகிறார்கள்.
அதே நேரத்தில், "அரசியல் பிரச்சார படம் மாதிரி இருக்கு, அண்ணா, கருணாநிதி காட்சிகள் ஓவர் டோஸ், தியாகிகள் கதையில ஒரு மணி நேரம் தெலுங்கு காதல் ட்ராக் ஏன்?, இந்திரா காந்தி கேரக்டர் செட்டே ஆகல" என விமர்சனங்களும் தீவிரமாக எழுந்து வருகின்றனர்.
சமீப கால தமிழ் சினிமாவின் வழக்கமான சாபம் பராசக்திக்கும் விலகவில்லை. வெள்ளி அல்லது சனி ரிலீஸ் முதல் 2-3 நாட்கள் ஹவுஸ்ஃபுல், திங்கள் டோட்டல் வாஷ்அவுட்! இந்த டெம்ப்ளேட் இங்கேயும் அப்படியே வேலை செய்துவிட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
பொங்கல் போட்டி
இதுவரை சோலோ ரிலீஸாக ஓடிய பராசக்தி, இந்த வாரம் பொங்கல் விடுமுறையையொட்டி வெளியாகும் வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில், திரௌபதி 2 உள்ளிட்ட படங்களால் மேலும் அழுத்தம் சந்திக்க உள்ளது. மேலும், தெலுங்கில் இருந்து தி ராஜாசாப், மன சங்கர வரபிரசாத் காரு போன்ற படங்களும் தியேட்டர்களை பிடிக்கத் தொடங்கியுள்ளன.
150 கோடி கனவு
ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவான பராசக்தி, 150 கோடி வசூலை தாண்டுமா என்பது இப்போது பெரிய கேள்விக்குறி. இந்த வார பொங்கல் விடுமுறையில் மீண்டும் தீப்பிடிக்காவிட்டால், "பராசக்தி - வசூலில் அரசியல் பேசிட்டு அமைதியா போயிடுமா?" என்ற சந்தேகம் தான் மிஞ்சுகிறது.
மொத்தத்தில், பராசக்தி - கருத்தில் வலுவானது, கலவையான விமர்சனங்களில் சிக்கியது, வசூலில் வேகம் எடுத்தது... ஆனால் திங்கட்கிழமையுடன் சேர்ந்து பிரேக் அடித்தது!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications