தேர்தல் நெருங்கும் நேரம், விஜய்யின் மாஸ்டர் பிளான்.. “வீடியோ” வரப்போகுதாமே! பல கேள்விகளுக்கான விடை
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தேர்தலை முன்னிட்டு மக்களிடம் தனது கருத்துக்களை நேரடியாக கொண்டு சேர்க்கும் முயற்சியாக, பிரபல யூடியூபர் மதன் கௌரிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக விஜய் எந்த தொலைக்காட்சி சேனல்களுக்கும் அல்லது யூடியூப் தளங்களுக்கும் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார். நடிகராக இருந்த காலத்திலேயே அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்தார். கடைசியாக பீஸ்ட் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக மட்டும் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள்
ஆனால், அரசியல் கட்சி தொடங்கிய பிறகும் அவர் இந்த அணுகுமுறையை தொடர்ந்தது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. அரசியலில் செயல்படும் ஒருவராக, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
விஜயின் வீடியோ
சமீபத்தில் நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கூட, விஜய் மூன்று நாட்கள் கழித்து தான் வீடியோ மூலம் பதில் அளித்தார் என்ற விமர்சனமும் எழுந்தது. அதேபோல், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய சங்கீதா விவாகரத்து குறித்த பேச்சுகள் மற்றும் திரிஷா தொடர்பான வதந்திகள் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் மௌனம் காத்தது குறித்தும் கேள்விகள் எழுந்தன.
விஜயின் சமீபத்திய இன்டர்வியூ
இந்த சூழ்நிலையில், மதன் கௌரி சேனலுக்கு விஜய் பிரத்யேக பேட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இன்டர்வியூ படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பாக இந்த பேட்டி வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேட்டியில், அவரது அரசியல் நிலைப்பாடுகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள், சமீபத்தில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு பதில்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விஜய் வெளிப்படையாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதன் கௌரியுடன் இன்டர்வியூ
மேலும், விஜய் ஏற்கனவே ஒரு ஆங்கில சேனலுக்கும் பேட்டி அளித்துள்ளதாகவும், அந்த பேட்டியும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது அவரது அரசியல் பயணத்தில் புதிய மீடியா அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மதன் கௌரி, விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பேட்டி இன்னும் நெருக்கமான மற்றும் சுதந்திரமான பேட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த திடீர் முடிவு
இதுவரை பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தாததும், நேரடி கேள்விகளுக்கு பதில் அளிக்காததும் குறித்து விமர்சனங்கள் இருந்த நிலையில், இந்த யூடியூப் பேட்டி மூலம் விஜய் தனது மௌனத்தை உடைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வெளியாகும் இந்த பேட்டி, அவரது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமையுமா, அல்லது சாதாரண பேட்டியாகவே முடிவடையுமா என்பது குறித்து ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications