Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? விஷ்ணு பட சூட்டிங்கில் நடந்த சம்பவம்.. விளாசிய பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது குடும்ப வாழ்க்கை, விவாகரத்து விவகாரம், சமீபத்திய நிகழ்வுகள் என பல விஷயங்கள் ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளன.

இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு விஜய் எடுத்த ஒரு நடவடிக்கை மீண்டும் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கடுமையாக பேசியிருக்கிறார்.

Vijay Balaji Prabhu Sangeetha S A Chandrasekhar

மகளிர் தின கூட்டம்

மகளிர் தினத்தை முன்னிட்டு நீலாங்கரையில் தனது மகளிர் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஒரு முக்கிய கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்த கூட்டத்தில் பெண்களுக்கு அரசியல் மற்றும் சமூக ரீதியாக சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்ததாக கூறப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதைத்தொடர்ந்து சிலர் சமூக வலைதளங்களில் கடுமையான கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கடும் விமர்சனம்

இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு (Balaji Prabhu) மிகவும் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பேசும்போது, "விஜய் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன் என்று சொல்கிறாரே... ஆனால் அவருடைய சொந்த வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறியதாவது: "இன்றும் அவரது மனைவி சங்கீதா (Sangeetha Sornalingam) என்னை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார். விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் கூட அவரது நடத்தையில் எந்த மாற்றமும் தெரியவில்லை" என்று விமர்சித்தார்.

மகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி

அதே பேட்டியில் விஜயின் குடும்பத்தை பற்றியும் பாலாஜி பிரபு சில கருத்துகளை கூறியுள்ளார். "விஜயின் சொந்த மகள் இப்போது எங்கே இருக்கிறார் என்பதற்கும் தெளிவான தகவல் இல்லை. அதை பற்றியும் அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை" என்றும் , விஜயின் அம்மா ஷோபா (Shoba Chandrasekhar) எங்கு சென்றாலும் 'என் பையன்' என்று பெருமையாக பேசுவார். ஆனால் விஜய் எந்த மேடையிலும் தனது அம்மாவை முன்னிலைப்படுத்தியதை நாம் அதிகமாக பார்க்கவில்லை" என்றார்.

அதேபோல் அவரது தந்தை சந்திரசேகர் (S. A. Chandrasekhar) குறித்து பேசும்போது, "விஜயை நடிகராக உருவாக்க அவருடைய அப்பா பல தியாகங்கள் செய்தவர். ஆனால் அவரையே இன்று விஜய் கண்டுகொள்ளவில்லை என்றே பேசப்படுகிறது" என்றார்.

நீலாங்கரை வீட்டில் நடந்த சம்பவம்

மேலும் அவர் கூறிய ஒரு சம்பவமும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. ஒரு முறை விஜயின் பெற்றோர் இருவரும் நீலாங்கரை வீட்டிற்கு சென்றபோது, "அம்மா மட்டும் உள்ளே வரட்டும்... அப்பா வரக்கூடாது" என்று கூறப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக பாலாஜி பிரபு தெரிவித்தார்.

விஷ்ணு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

தான் தயாரித்த விஷ்ணு Vishnu படப்பிடிப்பு காலத்தில் நடந்த சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். "அந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் மற்றும் அவருடைய அப்பா இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்தது. சில நேரங்களில் சண்டை போட்டுக்கொண்டு விஜய் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவார். பின்னர் அவரது அம்மா தான் சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டிக்கொண்டு வருவார்" என்று கூறினார்.

பலருக்கு ஹீரோ

பேட்டியின் இறுதியில் பாலாஜி பிரபு மிகவும் கடுமையான கருத்தையும் தெரிவித்தார். "பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் அவர்களுடைய அப்பா தான் ஹீரோ. விஜய் பலருக்கும் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் அவருடைய சொந்த மகனுக்கு அவர் ஹீரோவாக இருக்கிறாரா என்பது தான் கேள்வி" என்று கூறினார்.

தொடரும் சர்ச்சைகள்

சமீபத்தில் நடிகை திரிஷா Trisha Krishnan உடன் ஒரு திருமண விழாவில் விஜய் கலந்து கொண்டது பற்றியும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் எழுந்தது. அதே நேரத்தில் அவரது குடும்ப வாழ்க்கையைச் சுற்றியும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தற்போது விஜயைச் சுற்றியுள்ள இந்த சர்ச்சைகள் அரசியல் மற்றும் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. மொத்தத்தில், ஒருபுறம் அரசியல் பயணம்... மறுபுறம் குடும்ப சர்ச்சைகள்... இந்த இரண்டிற்கும் நடுவில் விஜயின் பெயர் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+