கரும் பூஞ்சைத் தொற்று மருந்து கேட்ட மதுரைக்காரர்.. தமிழக நிதியமைச்சர் அளித்த பதிலால் பரபரப்பு
மதுரை: புதிய தொற்றாக கருதப்படும் கரும் பூஞ்சை தொற்று மதுரையிலும் பரவத் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப நண்பர் மருந்து கேட்டு போட்ட டுவிட்டர் தகவலுக்கு மறு பதில் அளித்துள்ள தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மருந்து கிடைப்பது சவாலாக உள்ளதாக கூறியுள்ளார்
Recommended Video
கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது அலை கடும் பாதிப்பை தமிழகம் முழுவதும் உருவாகி வரும் நிலையில், அதனுடன் மற்றொரு புதிய கரும்பூஞ்சை தொற்று மதுரையிலும் பரவத் தொடங்கியுள்ளது என்ற தகவல் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மர்ஜோஸ் என்பவர் தனது டுவிட்டரில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மியூகோர் மைகோஸிஸ் எனும் கரும்பூஞ்சை தொற்று பரவி வருகிறது. ஆனால் இது குறித்த போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை. எனது நண்பரின் தாயாருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதற்கு உரிய மருந்தினைப் பெற்றுத் தர வேண்டுகிறேன் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மருத்துவர் எழிலன் உள்ளிட்டோருக்கு பதிவிட்டிருந்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை
இதற்கு டுவிட்டரில் பதிலளித்த தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், இதனை பொதுமக்களுக்கான எச்சரிக்கையாக கருத வேண்டும். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையினரும் இதுகுறித்து என்னை தொடர்பு கொண்டார்கள். உரிய மருந்து பெற்றுத் தருவதற்கு கடுமையாக முயற்சி மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

விலை அதிகம்
50 நபர்களுக்கு கரும்பூஞ்சைத் தொற்று..மருந்து மருந்து தேவைப்படுவதாகவும் இந்த மருந்தை தருபவர்கள் மிகக் குறைவாகவும் அதே சமயம் விலை அதிகமாகவும் உள்ளது. மாநிலம் கடந்து செல்ல முடியாத சூழலும் தற்போது நிலவுவதால் மக்கள் சமூக இடைவெளி முக கவசம் வீட்டில் இருத்தல் போன்ற நடை முறைகளை பின்பற்றுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
|
பொதுமக்கள் பீதி
மேற்கண்ட இரண்டு டுவிட்டர் பதிவுகள் மூலமாக மதுரையில் கரும்பூஞ்சைத் தொற்று பரவல் இருப்பது உறுதியாகி உள்ளது.. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகமும் உரிய விளக்கத்தை தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அச்சம் வேண்டாம்
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேலு வை என்று கேட்டபோது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 45 நாட்களில் 20 நபர்களுக்கு கரும்பூஞ்சை பாதிப்பு இருந்தது. பாதிக்கப்பட்ட 20 நபர்களுக்கும் உரிய மருத்துவம் அளித்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் சிலருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கிய நிலையில் குணமடைந்துள்ளனர். கரும்பூஞ்சை பதிப்பு காரணமாக இதுவரை உயிரிழப்போ,கண் பார்வை இழப்போ ஆகிய பாதிப்புகள் இல்லை. கரும்பூஞ்சை நோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை அது ஏற்கனவே உள்ள நோய் தான் என அவர் கூறினார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications