For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

#ResignModi ஹேஷ்டேக்கை முடக்க ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு நெருக்கடி தரவில்லை- மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: ஃபேஸ்புக்கில் #ResignModi ஹேஷ்டேக்கை முடக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக Wall Street Journal தவறான, மக்களை திசைதிருப்புகிற பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

Recommended Video

    திடீரென முடக்கப்பட்ட Resign Modi ஹேஷ்டேக்.. ஏன்? Facebook கொடுத்த விளக்கம்

    கொரோனா 2-வது அலையை மத்திய பாஜக அரசு சரியாக கையாளவில்லை என்பது பொதுவான விமர்சனம். இதனால் ஃபேஸ்புக்கில் #ResignModi ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது.

    Centre says Govt Didn’t ask Facebook to block #ResignModi

    இதில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் திடீரென #ResignModi ஹேஷ்டேக் முடக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்தே #ResignModi ஹேஷ்டேக் மீண்டும் வந்தது.

    இது தொடர்பாக விளக்கம் அளித்த ஃபேஸ்புக் நிர்வாகம், #ResignModi ஹேஷ்டேக் முடங்கியது தற்செயலானதுதான். இந்த முடக்கம் எதிர்பாராதது என்றும் கூறியிருந்தது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நெருக்கடியால்தான் #ResignModi ஹேஷ்டேக் முடக்கப்பட்டது Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. Wall Street Journal செய்தி தவறானது; மக்களை திசைதிருப்பும் பொய்யான செய்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் India Threatens Jail for Facebook, Whatsapp and Twitter Employees என்ற தலைப்பில் முற்றிலும் ஒரு பொய்யான செய்தியையும் Wall Street Journal வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த பத்திரிகைக்கு அதிகாரப்பூர்வமான மறுப்பும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Fact Check

    வெளியான செய்தி

    மத்திய அரசின் நெருக்கடியால் #ResignModi ஹேஷ்டேக்கை ஃபேஸ்புக் முடக்கியது

    முடிவு

    Wall Street Journal செய்தி பொய்யானது.

    ரேட்டிங்

    False
    பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
    English summary
    The Indian government said that the Wall Street Journal report that alleged temporary blocking of the hashtag #ResignModi was misleading, mischievous.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X