For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஎஃப்ஐ போராட்டத்திற்காக.. கேரளாவில் நிறுத்தப்பட்ட ராகுல் பாத யாத்திரை? உண்மையில் நடந்தது என்ன

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளாவில் காங்கிரஸ் பாத யாத்திரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டத்திற்காக நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மையைப் பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை சென்று வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி காஷ்மீரில் நிறைவடைகிறது.

கடந்த மாதம் 31இல் கன்னியாகுமரியில் இந்த பேரணி தொடங்கியது. மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக 3500 கிமீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் முடிவடைகிறது.

ஆபரேஷன் ஆக்டோபஸ்! அம்பலமானது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புகள்- நெருக்கடியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா! ஆபரேஷன் ஆக்டோபஸ்! அம்பலமானது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புகள்- நெருக்கடியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா!

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் பாத யாத்திரை முடிந்த நிலையில், கேரளாவில் இப்போது ராகுல் காந்தி பாத யாத்திரை செல்கிறார். கேரளாவில் மொத்தம் 19 நாட்கள் ராகுல் காந்தி பாத யாத்திரை செல்ல உள்ளார். இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குத் தொடர்புடைய 93 இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து இருந்தது.

 கேரளா

கேரளா

இதைக் கண்டித்து அதற்கு மறுநாள் நடந்த போராட்டத்தில் கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, கொல்லம் மற்றும் வயநாடு பகுதிகளில் வன்முறை வெடித்தது, இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து பிஎஃப்ஐ அழைப்பு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. பிஎஃப்ஐ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் காங்கிரஸ் கட்சி தனது பாத யாத்திரையை ஒரு நாள் நிறுத்தியதாக பாஜகவின் கபில் மிஸ்ரா பரபர குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.

 பரபர புகார்

பரபர புகார்

மிஸ்ரா தனது ட்வீட்டில், "பிஎஃப்ஐ மற்றும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.. காங்கிரஸ் இன்று தனது 'யாத்திரையை' நிறுத்தியது. இதை விடக் கேவலமான மற்றும் வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது" என்று பதிவிட்டு உள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிராச்சி சாத்வி உட்பட பலரும் அந்த விவகாரத்தை எழுப்பி இருந்தனர்.

 உண்மை என்ன

உண்மை என்ன

மேலும் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பிஎஃப்ஐ போராட்டம் காரணமாகக் காங்கிரஸ் பாத யாத்திரையை ஒத்தி வைத்தது தவறானது என்றனர். இந்தச் சூழலில் இது குறித்த உண்மை தெரிய வந்து உள்ளது. இந்த இரு சம்பவத்திற்கும் இடையே எவ்வித தொடரும் இல்லை. பாத யாத்திரையில் சில நாட்களுக்கு ஒரு முறை ஓய்வு நாட்கள் வரும். அப்படித்தான் செப்.23ஐ ஓய்வு நாளாக அறிவித்து இருந்தது.

 ஓய்வு நாள்

ஓய்வு நாள்

பிஎஃப்ஐ அமைப்பின் போராட்டத்திற்கு முன்னரே காங்கிரஸ் ஓய்வு நாளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 20ஆம் தேதி ஜெய்ராம் ரமேஷ் பேசும் லவ் வீடியோவில், "செப். 23ஆம் தேதி ஓய்வு நாள். ஒவ்வொரு முறையும் ஏழு நாட்கள் பாத யாத்திரைக்குப் பின்னர் ஒரு நாள் ஓய்வு எடுப்போம். அப்படித்தான் 23ஆம் தேதி ஓய்வு நாள். மேலும், 29ஆம் தேதி கேரளாவில் கடைசி ஓய்வு நாள்" என்று கூறி இருந்தார். அன்றைய தினம் (செப். 20) காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்திலும் செப். 23 ஓய்வு நாள் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

இதன் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட சோதனைகளுக்கு முன்னரே, செப்.23ஐ காங்கிரஸ் ஓய்வு நாளாக அறிவித்து இருந்தது உறுதியாகிறது. அதேபோல காங்கிரஸ் தெய்தித்தொடர்பாளர் பவன் கேராவும் தனது ட்விட்டரில் மிஸ்ராவின் கருத்தை நிராகரித்து உள்ளார். செப். 23 முன்னரே திட்டமிடப்பட்ட ஓய்வு நாள் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் இரு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகிறது.

Fact Check

வெளியான செய்தி

வெளியான செய்திபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ராகுல் காந்தி பேரணி நிறுத்தப்பட்டதாகத் தகவல் பரவியது.

முடிவு

முடிவுசெப்.23ஆம் தேதி காங். ஏற்கனவே திட்டமிட்ட ஓய்வு நாள். இரண்டு நிகழ்வுகளும் தொடர்பு இல்லை என்பது தெரிய வருகிறது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Congress' Bharat Jodo Yatra is not Stopped For PFI Protests: Kerala PFI Protest and congress Bharat Jodo Yatra rest day on same day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X