For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைன் சீட்டிங்.. வீடியோ எடுத்துவிட்டதாக மிரட்டும் ஹேக்கர்ஸ் கும்பல்.. நம்ப வேண்டாம் மக்களே!

Google Oneindia Tamil News

சென்னை: கணினியின் கேமரா மூலம் அந்தரங்க வீடியோ எடுத்துவிட்டதாக கூறி மக்களை மிரட்டும் கும்பல்களை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் இந்தியாவின் கணினி அவசரநிலை பதில் குழு (The Computer Emergency Response Team of India -CERT-In) தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சிகளை கேட்டு மிரட்டும் கும்பல்களை நம்ப வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதை வைத்து மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக மக்களை வீடியோ எடுத்துவிட்டதாக கூறி, கிரிப்டோகரன்சிகளை கேட்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

Fake News Buster: Dont fall for fake video ransom mails says CERT

இந்த கும்பல்கள் கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு இயங்கி வருகிறது. இணையத்தில் சில இமெயில் முகவரிக்கு நாங்கள் உங்கள் கணினியை ஹேக் செய்துவிட்டோம் என்று இவர்கள் மெயில் செய்வார்கள். உங்கள் கணினியில் இருக்கும் கேமரா மூலம் உங்களை புகைப்படம் எடுத்துவிட்டோம். உங்களின் அந்தரங்க தகவல்கள், புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது.

உங்களின் வீடியோக்கள் எங்களிடம் இருக்கிறது. அதேபோல் உங்கள் இமெயிலை ஹேக் செய்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறுவார்கள். இதற்கு ஆதாரமாக நமது இமெயில் பாஸ்வேர்டை கூட அவர்கள் அளிப்பார்கள். நாம் இதற்கு முன் பயன்படுத்திய இமெயில் பாஸ்வேர்ட்களை அதற்கு உரிய ஹேக்கிங் சாப்ட்வேர் மூலம் கண்டுபிடித்து நம்மை மிரட்டுவார்கள்.

இதன் மூலம் நமது அந்தரங்கத்தை வெளியிட போவதாக கூறி அவர்கள் மிரட்டல் விடுப்பார்கள். மக்களிடம் பணம் கேட்கும் இவர்கள், கிரிப்டோகரன்சி வடிவில் அந்த பணத்தை அனுப்பும்படி கூறுவார்கள். முக்கியமாக அந்தரங்க சைட்களில் பார்ன் வீடியோக்கள் பார்க்கும் சமயத்தில் இதே போன்ற ஹேக்கர்கள் நம்முடைய இமெயில் முகவரியை திருட வாய்ப்புள்ளது.

ஆனால் இது போன்ற மிரட்டல்களை மக்கள் நம்ப கூடாது, இவர்களுக்கு மக்கள் பயப்பட கூடாது மத்திய அரசின் இந்தியாவின் கணினி அவசரநிலை பதில் குழு (The Computer Emergency Response Team of India -CERT-In) தெரிவித்துள்ளது.

மக்களை கணினியின் கேமரா மூலம் வீடியோ எடுத்துவிட்டதாக கூறி அவர்களிடம் இமெயில் மூலம் கிரிப்டோகரன்சிகளை கேட்கும் கும்பல்களை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் இந்தியாவின் கணினி அவசரநிலை பதில் குழு (The Computer Emergency Response Team of India -CERT-In) தெரிவித்துள்ளது. இவர்கள் உண்மையில் உங்களின் தகவலை திருடவில்லை.

மாறாக உங்கள கணினிக்கு வைரஸை அனுப்பி இருப்பார்கள். அதன் மூலம் உங்கள் பாஸ்வேர்ட் மெமரியை திருடி உங்களை மிரட்டவார்கள். இதனால் உடனே நீங்கள் உங்கள் இமெயில் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும். துரிதமாக செயல்பட்டு பாஸ்வேர்டை மாற்ற வேண்டும். அவர்களால் உங்களின் அந்தரங்கத்தை வெளியிட முடியாது. இதனால் அவர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற கூடாது என்று மத்திய அரசின் இந்தியாவின் கணினி அவசரநிலை பதில் குழு (The Computer Emergency Response Team of India -CERT-In) தெரிவித்துள்ளது.

English summary
Fake News Buster: Don't fall for fake video ransom mails says CERT in the advice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X