Fact Check: வாட்ஸ் அப்பில் ‘ரெட்’ டிக்.. 3 டிக் வந்தா அவ்ளோதான்.. பதற வைக்கும் மெசேஜ்.. உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்ஸ் அப்பில் சமீப நாட்களாக ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. வாட்ஸ் அப் சாட்களை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும், நீங்கள் அனுப்பும் மெசேஜில் சிவப்பு நிற டிக் வந்தால் அரசு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அர்த்தம் என்றும் தகவல் பரவியது. மத்திய அரசின் Press Information Bureau இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் ஏராளமான போலியான செய்திகளும் உலவி வருகின்றன. வாட்ஸ் அப் பற்றி வாட்ஸ் அப்பிலேயே பல முறை பொய்யான தகவல்கள் பரவியுள்ளன. அந்த வகையில், அண்மைக்காலமாக உங்கள் வாட்ஸ் அப் சாட்டை மத்திய அரசு கண்காணிக்கிறது உஷார் என்று ஒரு தகவல் தீவிரமாகப் பரவி வந்தது.

Indian government is not monitoring your WhatsApp chats: PIB clarifies about fake news

வாட்ஸ் அப்பில் யூசர்கள் அனுப்பிய மெசேஜுக்கு பக்கத்தில் அந்த மெசேஜ் அனுப்பப்பட்ட ஸ்டேட்டஸ் குறித்த தகவலை டிக் மார்க் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு டிக் வந்தால் நமது மெசேஜ் செண்ட் ஆகிவிட்டது. இன்னொரு டிக் வந்தால், அந்த மெசேஜ் நாம் அனுப்பியவரைச் சென்றடைந்து விட்டது. ப்ளூ டிக் வந்தால், அந்த மெசேஜ் பார்க்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

ஆனால், வாட்ஸ் அப் டிக் மார்க் தொடர்பாக பரவிய தகவலில், மூன்று ப்ளூ டிக் இருந்தால் சம்பந்தப்பட்ட மெசேஜை அரசு பார்த்துள்ளது. இரண்டு ப்ளூ மற்றும் ஒரு ரெட் டிக் இருந்தால் மெசேஜ் அனுப்பியவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றும், ஒரு ப்ளூ மற்றும் இரண்டு ரெட் டிக் இருந்தால் நமது தரவுகளை அரசு ஆராய்ந்து வருகிறது என்றும், மூன்று ரெட் டிக் இருந்தால் நமக்கு எதிராக அரசு நடவடிக்கையைத் தொடங்கி விட்டது, விரைவில் கோர்ட் மூலம் சம்மன் அனுப்பலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற வாட்ஸ் அப் வதந்தி சில ஆண்டுகளாகவே அவ்வப்போது விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. பலரும் இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் உடனடியாக மற்றவர்களுக்கும் பகிர்வதால், மீண்டும் மீண்டும் இந்த போலிச் செய்தி சுற்றலில் இருந்து வருகிறது.

இந்த வதந்தி குறித்து ஆய்வு செய்த மத்திய அரசின் தகவல் பத்திரிகை தகவல் அலுவலகமான PIB-ன் ஃபேக்ட் செக்கிங் குழு, 'இந்தத் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் போலியானது. வாட்ஸ்அப் அல்லது இதர சமூக வலைதளங்களில் யூசர்களின் செயல்பாட்டை அரசு கண்காணிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது.

Indian government is not monitoring your WhatsApp chats: PIB clarifies about fake news

வாட்ஸ்அப்பில் ரெட் டிக் மெசேஜ் ஸ்டேட்டஸ் என்பது பயன்பாட்டிலேயே இல்லை. இப்போதைக்கு சாம்பல் நிற மற்றும் ப்ளூ டிக் சிம்பல் மட்டுமே மெசேஜ் ஸ்டேட்டஸை காட்டுவதற்காக இருக்கின்றன. வாட்ஸ்அப் தளம் End-to-end என்கிரிப்ஷனில் இயங்குகிறது. அதனால் மெசேஜை அனுப்பும் நபரும், அதை பெறும் நபரும் மட்டுமே அதை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தவறான தகவல்களும் கூட காட்டுத்தீ போல் பரவக்கூடிய காலகட்டத்தில் வாழ்கிறோம். தகவல்களைப் பகிர்வதற்கு அல்லது நம்புவதற்கு முன் சரிபார்க்க வேண்டியது அவசியம். எப்போதும் விழிப்புடன் இருந்து சமூக வலைதளங்களைப் பொறுப்பாகக் கையாள்வோம்.

Fact Check

வெளியான செய்தி

வாட்ஸ் அப் மெசேஜ்களை மத்திய அரசு கண்காணிக்கிறது. நீங்கள் அனுப்பும் மெசேஜுக்கு அருகில் சிவப்பு நிற டிக் வந்தால், மத்திய அரசு உங்கள் மெசேஜை கண்காணிக்க தொடங்கி விட்டது என்று அர்த்தம் என்ற தகவல் பரவியது.

முடிவு

மத்திய அரசு எந்தவொரு சமூக வலைதளத்திலும் தனிநபர் தகவல்களை கண்காணிப்பது இல்லை. வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் போலிச் செய்தி என மத்திய அரசின் தகவல் பத்திரிகை தகவல் அலுவலகமே விளக்கம் அளித்துள்ளது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+