தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. கோல்டுல முதலீடு செய்யலாமா? சர்வதேச நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று அமெரிக்காவின் அக்டோபர் மாத பணவீக்க விகிதம் வெளியாகியிருந்தது. இது எதிர்பார்த்தைவிட அதிகமாக இருப்பதால், அடுத்த மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன் காரணமாக தங்கத்தின் விலை தற்காலிகமாக சரிவை சந்திக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பணம் லாபம் தரும் இடத்தில்தான் பாயும். தங்கம் லாபம் தரும் பொருள்தான். ஆனால், இப்போதைக்கு தங்கத்தை விட.. அமெரிக்க கடன் பத்திரங்கள் மற்றும் அமெரிக்க டாலர்தான் அதிகம் லாபம் தரும் விஷயமாக இருக்கிறது. எனவே பணக்காரர்கள் தங்கள் பணத்தை இதை நோக்கி திருப்பியுள்ளனர்.

gold US

வழக்கமாக டிமாண்ட் குறைவாக இருக்கும் பொருட்களுக்கு மவுசு பெரிய அளவில் இருக்காது. அதேதோன் தங்க மேட்டரிலும் நடந்திருக்கிறது. நேற்று வெளியான அமெரிக்காவின் பணவீக்க விகிதம் 3.8% இருக்கிறது. அமெரிக்கா தனது பணவீக்க விகிதத்தை 2% என்கிற லிமிட்டுக்குள் வைக்க விரும்புக்கிறது. ஒருவேளை இந்த லிமிட்டை தாண்டும்போது.. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை அதிகரிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதம் இந்த வட்டியை அதிகரிக்க 97% வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே தங்கத்தை விட்டுவிட்டு.. எல்லோரும் கடன் பத்திரங்களை நோக்கியும், டாலரை நோக்கியும் ஓடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இன்றும் தங்கத்தின் விலை லேசாக அதிகரித்திருந்தாலும்.. அடுத்தடுத்த நாட்களில் குறையாலம் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,420க்கும், சவரனுக்கு ரூ.2,360 சரிந்து ஒரு சவரன் ரூ.91,360 எனவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.10 சரிந்து ரூ.165க்கும், கிலோ ரூ.10,000 சரிந்து ரூ.1,65,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் விலை அதிகரித்திருந்தாலும், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது குறித்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறைந்த காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதை விட, 10-15 ஆண்டு முதலீட்டில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். நீண்ட காலம் என்று பார்க்கும்போது பணவீக்கம் குறையும்போது தங்கத்தின் மதிப்பு அதற்கேற்ப அதிகரிக்கும் என 'ஜே.பி.மோர்கன்' கூறியிருக்கிறது. அதேபோல மீண்டும் சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரிக்கிறது எனில்.. எல்லோரும் தங்கத்தை நோக்கிதான் ஓடுவார்கள். எனவே தங்கத்தின் மதிப்பு அப்போது உயரும் என 'ப்ளூம்பெர்க்' கூறியிருக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அதாவது, தங்கம் என்பது FD போல மாதாந்திர வருமானத்தை கொடுக்காது. அது எப்போது விலை உயர்கிறதோ.. அப்போதுதான் லாபம் தரும். எனவே முதலீடு செய்யும்போது.. அது சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+