Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Price Today: குறையவே குறையாது போல.. மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2,080 அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது. இதனால் இன்றும் தங்கம் விலை குறையுமா என எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,080 அதிகரித்து மீண்டும் பழையபடி உயரத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெரிய அளவில் உயராமல் இருந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் நாளுக்கு நாள் எகிறத் தொடங்கியது தங்கம் விலை.

Gold Price Soars Again Rs 2 080 Jump in a Single Day No Signs of Cooling Down

Gold Price - தங்கம் விலை புது உச்சம்

தினம் தினம் புது உச்சம் என்றபடி தங்கம் விலை உயர்ந்தபடியே வந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. ஆனால் ஒரு ஆண்டுக்குள் இந்த தங்கம் விலை வரலாற்று உச்சம் தொட்டது. ஒரே ஆண்டில் கடந்த அதாவது கடந்த ஜனவரி மாதம் ரூ.97 ஆயிரத்தை கடந்தது. பின்னர் ஜனவரி 29 ஆம் தேதி வரலாற்றிலேயே இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.1,34,000 ஆயிரத்தை கடந்த பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

தங்கம் விலை வரலாற்றிலேயே புது உச்சமாக தங்கம் விலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அதன் பிறகு தொடர்ச்சியாக தங்கம் விலை சரிய தொடங்கியது. பின்னர் தங்கம் விலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் என்ற அளவில் இருந்து வருகிறது. ஏறுவதும் இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வந்தது.

திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை

கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை சற்று குறைந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென உயர்ந்தது. குறைந்த வேகத்தில் அப்படியே உயர்ந்துவிட்டது. ஒரு சவரன் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்தது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது.

இன்றைய ரேட் என்ன?

ஆபரணத் தங்கம் சவரனுக்கு நேற்று ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்றும் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தங்கம் விலை குறையவே குறையாது என்ற அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிகரித்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.1,17,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.260 அதிகரித்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்று ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை ஆகின்றது.

தங்கம் விலை நிலவரம்

21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440 (இன்று)
20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360 (நேற்று)
19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840
17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520
15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200

12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+