Gold Rate Today: அம்மாடியோவ்.. தங்கம் விலை ஒரே நாளில் 5,200 உயர்வு.. வரலாற்றில் புது உச்சம்.. சென்னையில் இன்றைய ரேட்?
சென்னை: நேற்று சற்று குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை எக்குத்தப்பாக எகிறியுள்ளது. காலையில் ரூ.2,960 அதிகரித்த நிலையில் மாலையில் ரூ.2240 அதிகரித்தது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தங்கம் விலை (Gold Rate) இந்த மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நிலையில், 28 ஆம் தேதியான இன்றுக்குள் 28 ஆயிரம் அதிகரித்து ரூ.1,24,880 ஐ தொட்டுள்ளது. தாறுமாறாக உயர்ந்துள்ள தங்கம் விலையால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே வருடத்தில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஒரே வருஷத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரை உயர்ந்து சாமானிய மக்கள் தங்கம் வாங்கும் கனவில் மண்ணை அள்ளி வீசியது.
இதுவே வரலாற்றில் அதிகம் உயர்ந்ததாக இருந்தது. ஆனால் "இதென்ன உயர்வு, உங்களுக்கு ஸ்பெஷல் அயிட்டமே இருக்கு" என்று சொல்கிற வகையில் ஒரு வருஷத்தில் ஏறும் தங்கம் விலை ஒரே மாதத்தில் ஏறும் வகையில் தற்போது தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வருகிறது. அதாவது 27 நாட்களில் சவரனுக்கு 27 ஆயிரம் அதிகரித்து உள்ளது.
டிரம்பின் அதிரடி நடவடிக்கையினால்
இதனால் தங்கம் வாங்க நினைக்கும் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது நடவடிக்கையினால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடுகளை குவித்து வருகிறார்கள். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை உயர்வு இருந்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,20,200 -க்கு விற்பனை ஆனது.
இன்றைய தங்கம் ரேட் என்ன?
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. அதாவது நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 960 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 680 ஆகவும் உள்ளது. தொடர்ந்து ஏறி வந்த தங்கம் விலை சற்று சரிந்துள்ளதால் இன்றும் விலை குறையுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
ஆனால் இன்று ஒரு வாரத்திற்கு சேர்த்து ஒரே நாளில் உயர்ந்துள்ளது. இன்று காலையில் சென்னையில் சவரன் ரூ.2,960 அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.370 அதிகரித்து ரூ.15,330-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று காலை ஒரு சவரன் ரூ.1,22,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை மேலும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதாவது மாலையில் மேலும் ரூ.2,240 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரே நாளில் ரூ.5,200 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,24,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.650 அதிகரித்து ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்வு
வெள்ளி விலையும் தங்கத்திற்கு போட்டியாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமுக்கு ரூ.310-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் கிராமுக்கு ரூ.375-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் ஒரு கிராம் 12 உயர்ந்து ரூ.387-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13 அதிகரித்து இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880 (இன்று மாலை)
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,22,640 (இன்று காலை)
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680 (நேற்று)
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)
21.01.2026 - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 (காலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
-
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications