Gold Rate Today: இன்று எகிறி அடித்த தங்கம் விலை.. முதல் முறையாக 78,000-ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம்
சென்னை: தங்கம் விலை கடந்த ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.3,700 உயர்ந்தது. இந்நிலையில், சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து 3,600 டாலரை எட்டியுள்ள நிலையில் இன்று இந்தியாவில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்து ரூ.78,440க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,805 க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் இவையே முக்கிய காரணிகளாக உள்ளன. அமெரிக்கா, இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை தாறுமாறு
ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தங்கம் விலை முதல் முறையாக சவரனுக்கு ரூ.75,000-ஐ கடந்தது. தொடர்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி ரூ.75,760 என தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தொடர்ந்து தங்கம் விலை 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து கொண்டே வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த மகிழ்ச்சி நிலைக்காத அளவுக்கு மீண்டும் படுவேகமாக உயரத் தொடங்கியது தங்கம் விலை. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூபாய் 73 ஆயிரத்தை தொட்ட நிலையில் மாதத்தின் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த சில நாட்களாக உச்சம்
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 2 நாட்களிலுமே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,705க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.77,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. செப்டம்பர் 2 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 9,725-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 77,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தை நிலவரம்
இந்நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,524 டாலரை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை இந்தளவுக்கு உயர்ந்தது இதுவே முதல்முறை.
இன்றைய நிலவரம்
தங்கம் விலை இதற்கு முன்பு சர்வதேச சந்தையில் 3,508 டாலரை எட்டி இருந்ததே புதிய உச்சமாக இருந்தது. ஆனால், இப்போது அதையும் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக இன்றும் தங்கம் விலை கடுமையாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. முதல் முறையாக 78,000 ரூபாயை கடந்துள்ளது தங்கம் விலை.
சென்னையில் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்து ரூ.78,440க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,805 க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சம் தொட்டு வருவதால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கம் விலை நிலவரம்
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640
31.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
30.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760
28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240
27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120
26.08.2025-ஒரு சவரன் ரூ.74,840
25.08.2025-ஒரு சவரன் ரூ.74,440
24.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
23.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
22.08.2025-ஒரு சவரன் ரூ.73,720
21.08.2025-ஒரு சவரன் ரூ.73,840
20.08.2025 - ஒரு சவரன் ரூ.73,440
19.08.2025 - ஒரு சவரன் ரூ.73,880
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ.75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200












Click it and Unblock the Notifications