திட்டு திட்டா இருக்கா தேமல்.. உடம்பெல்லாம் அரிப்பா? தேமலை நீக்க இதுதான் சூப்பர் டிப்ஸ்.. பலே நன்னாரி
சென்னை: தேமல் என்பது என்ன? தேமல் வர என்ன காரணம்? இதை தடுக்க எளிய வழிமுறைகள் உள்ளனவா?
தேமல் உடலில் படர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நோய் தொற்று காரணமாக தேமல் வரலாம்... அதிகப்படியான வியர்வை காரணமாகவும் தேமல் வரலாம்.. பொது சுகாதார குறைவாக இருப்பதாலும் தேமல் வரலாம். வைட்டமின் B12 குறைவாக இருப்பவர்களுக்கும் தேமல் வரலாம்.

சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தேமல் வரலாம்.. ஸ்டீராய்டு மாத்திரைகளை நீண்டகாலம் எடுத்து கொள்பவர்களுக்கும் தேமல் வரலாம்.. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் வரலாம். இதனால், மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோலின் நிறம் குறைவதோ அல்லது அதிகரித்தோ காணப்படும்.. பிறகு, மெல்ல மெல்ல செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டு திட்டாக தோன்றும்.. அரிப்பும் ஏற்படும்.
இந்த தேமலுக்கு சரியான முறையில் சிகிச்சை தராவிட்டால், உடம்பெல்லாம் பரவிவிடும்.. எனவே, சிகிச்சை மிகவும் முக்கியம்.. அதைவிட முக்கியம், இது எந்தமாதிரியான தேமல் என்பதை கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, உடலில் தேமல் ஏற்பட்டால், உடனடியாக சரும டாக்டரை அணுக வேண்டும். இதற்கு எத்தனையோ மருந்து வகைகளும் உண்டு,.
சுகாதாரம்: எனினும், சில அடிப்படை விஷயங்களை நாம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து வரும்போது, இந்த தேமலின் தாக்கம் அதிகரிக்காமல் தடுக்கலாம்.. குறிப்பாக, உடல் சுத்தம் மிகவும் அவசியமாகிறது..
தினமும் 2 வேளை குளிக்க வேண்டும்.. அதிக கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பினை, மருத்துவரிடம் கேட்டு அதை உடலுக்கு பயன்படுத்த வேண்டும். கிருமி நாசினியான மஞ்சளை அதிகம் பயன்படுத்தலாம். தேமல், படை குணமாகும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பவுடர் செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம்.
அதேபோல, துளசி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து, விழுதாக அரைத்து தூங்கும் முன்பு தேமல் படர்ந்துள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவி வர வேண்டும்..
இலைகள்: ஆடாதோடை இலையை, தேங்காய் எண்ணெயில் போட்டு, 1 வாரத்துக்கு வெயிலில் வைக்க வேண்டும்.. பிறகு இந்த எண்ணெய்யை தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால், தேமல் மெல்ல மறையும்.. அல்லது முள்ளங்கியை மோர் விட்டு அரைத்து, இந்த விழுதினை தேமல் உள்ள இடத்தில் தேய்க்கலாம்..
வேப்பிலையை அரைத்து, இந்த விழுதினை தேமல் இடத்தில் தடவிவரலாம். 2 கிளாஸ் தண்ணீரில் வேப்பிலைகளை சேர்த்து நன்றாக சுண்ட கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தாலும் சரும வியாதி அகலும்.. அதேபோல, வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்..
சரும நலன்: வியர்வை உறிஞ்சும் பருத்தி உள்ளாடைகளை தரமானதாக அணிய வேண்டும்.. சுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும்.. கனமான உள்ளாடைகளை தவிர்க்கலாம்.. அணிவதும் கூட அதிகப்படியான வியர்வையை உறிஞ்சாமல் காக்கும். இயன்றவரை பருத்தி துணிகள் அணிவது நல்லது.
புளியங்கொட்டையை காயவைத்து பவுடராக்கி, ஆலிவ் எண்ணெய் கலந்து, இந்த விழுதினையும் தேமல் உள்ள இடத்தில் தடவி வரலாம். அதிக இனிப்புகளை தவிர்த்துவிட்டு, கசப்பான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. நன்னாரி வேரை நசுக்கி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தாலும் தேமல் குறையும்.
கீழாநெல்லி: அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூசி வரலாம்.. கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலையை பாலில் அரைத்து தேமலில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வரலாம். நாயுருவி இலை சாறை தடவி வந்தாலும் தேமல் மறைய துவங்கும். இது அனைத்தையும்விட முக்கியமாக சூரிய ஒளியிலிருக்கும் வைட்டமின் D மிகவும் அவசியம்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications