சக்கரவர்த்தி கீரை பயன்கள்.. கரையும் கிட்னி கற்கள்.. ரத்த விருத்தி, மூட்டுவலிக்கு சக்ரவர்த்தி கீரை
சென்னை: கிட்னியில் உள்ள கற்களை கரைப்பது முதல், உடம்பில் ரத்த விருத்தி பெருகும்வரை உதவக்கூடியது சக்கரவர்த்தி கீரை. இந்த கீரையை எப்படி சாப்பிட வேண்டும்? இதனை உணவில் சேர்த்து கொண்டால், கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? வழக்கமான கீரைகளுக்கும், இந்த சக்ரவர்த்தி கீரைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் A, B, C நிறைந்துள்ளது. இது தவிர தாவர மூலக்கூறுகளான பிளேவானாய்டுகள், சாப்போனின்கள், ஆல்கலாய்டுகள், டெரிபினாய்டுகள் பீட்டானலன், டானின்கள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் சக்கரவர்த்தி கீரையில் உள்ளன.

சத்துக்கள் அதிகம்
முக்கியமாக இதில் நார்ச்சத்து அதிகமாகவே உண்டு.. 100 கிராம் கீரையில் 3.7 கிராம் புரதம், 0.4 கிராம், கொழுப்பு 2.9 கிராம், மாவுச்சத்து 150 மி. கிராம் சுண்ணாம்புச்சத்து 80 மி.கி., பாஸ்பரஸ் 4.2 மி.கி. இருக்கிறது.. கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால்தான், இதை சக்கரவர்த்தி கீரை என்று அழைக்கிறார்கள்.. பத்துவா கீரை என்றும் சொல்வார்கள்..
வாரம் ஒருமுறையாவது இந்த கீரையை சாப்பிட வேண்டும் என்பார்கள்.. காரணம், குடலை சுத்தம் செய்து, செரிமானத்தை சீராக்குகிறது.. சிறுநீரக தொற்று இருந்தால் அது சரியாகிறது.. கேன்சர் செல்களை ஆரம்பத்திலேயே தடுக்கும் தன்மை இந்த கீரைக்கு உண்டு.
உடையும் கிட்னி கல்
கிட்னியில் கல் இருந்தால், சக்கரவர்த்தி கீரையை துண்டு துண்டாக நறுக்கி நல்லெண்ணெய்யில் தாளித்து தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கற்கள் உடைந்து கரைந்து வெளியேறும்.
ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இந்த கீரை.. உடம்பில் ரத்தம் ஊற வேண்டுமானால், இந்த கீரையை தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, மசித்து வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு, மிளகுதூள், உப்பு சேர்த்து சூப் போல குடிக்கலாம்.
ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால், உடல் செல்களின் சிதைவை தடுக்கிறது. மேலும் செல்களை பாதுகாக்கவும் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தக்கூடியது இந்த கீரைகள்.. உடலின் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் தூண்டுகோலாகிறது..
வயிற்றுப் புண், வாய்ப்புண்
வயிற்றுப்புண், வாய்ப்புண்கள் ஆற்றக்கூடும்.. C வைட்டமின் இருப்பதால், சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. காயங்களுக்கு மருந்தாகிறது. கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு வலு தருகிறது. எனவே, இதனை வளரும் குழந்தைகள் கட்டாயம் சாப்பிடலாம்.. சூப் போல வைத்து தரலாம்.. அல்லது பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு போல சமைத்து தரலாம்.
பெண்களுக்கு ரத்தசோகை முதல் மாதவிலக்கு பிரச்சனை வரை தீர்க்க இந்த கீரையே போதுமானது.. ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரையில் சிறிது சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம். இதனால், மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
தாம்பத்திய பிரச்சனை
தாம்பத்திய பிரச்சனை இருந்தால், இந்த கீரையைதான் அந்த காலத்தில் முன்னோர்கள் தம்பதிக்கு அடிக்கடி சமைத்து தருவார்களாம்.. இந்த கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து, கொப்பரை தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கூட்டு போல சமைத்து சாப்பிட்டால், தாம்பத்தியத்தில் நாட்டம் கூடுமாம்.
வெயிலால் தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டால், இந்த கீரையை விழுதாக அரைத்து பூசி வரலாம். இந்த கீரையை பயன்படுத்திதான் மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்துகள் தயாரிக்கிறார்கள். நேரடியாக கீரையையும் மூட்டு வலிக்கு பயன்படுத்தலாம்..
இதற்கு ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி, இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் கட்டி வரவேண்டும். அல்லது ஒத்தடம் தரலாம்.. இதனால் மூட்டு வலி மறையும்.
மூட்டு வலி தவிர, உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும், இந்த கீரையுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்து, சூடாக்கி வலியுள்ள இடங்களில் தடவினாலே போதும். அல்லது சக்கரவர்த்தி கீரையை மட்டுமே அரைத்து பசையாக சருமத்தின் மீது பூசினாலும் காயங்கள் ஆறும்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications