சீத்தாப்பழம்.. வாதநோயை விரட்டி.. சீத்தாப்பழத்துல அத்தனையும் நன்மையா? மன அழுத்தத்தை போக்கும் சீதாபழம்
சென்னை: வாதநோயை தீர்க்கக்கூடிய பழங்களில் முதன்மையானது சீத்தாப்பழம்.. தித்திப்பு நிறைந்த இந்த பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? குடல் புண்களை போக்குவதில் எந்தவகையில், இந்த சீத்தாழப்பழம் உதவுகிறது?
கஸ்டர்ட் என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவையை கொண்டுள்ளதால், இந்த பழத்திற்கு 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று பெயர் வந்ததாம்.. வைட்டமின் B, மக்னீசியம், வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிரம்பிகிடக்கின்றன.

இரும்புச்சத்து: 100 கிராம் சீத்தாபழத்தில் 94 கலோரிகள் இருப்பதால், உடல் எடை பலவீனமானவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.. இந்த சீதாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் உடலில் சேராது... நினைவுத்திறனையும், ஞாபக சக்தியையும் பெருக்கக்கூடிய இந்த பழத்தினை வளரும் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை விலகும்.. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுத்துநிறத்துவதில் சீத்தாப்பழம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சீதாப்பழங்கள், குடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற துணைபுரிகிறது.
மனநிறைவு: மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டால் மனம் அமைதி பெறும்.. காரணம், இதிலிருக்கும் கால்சியம், மெக்னீசியம் மன அழுத்தத்தை சரி செய்கிறது.. அத்துடன் நல்ல தூக்கத்தையும் தருகிறது.. குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வை நீக்குகிறது.. சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கிறது.. சரும வறட்சி இருப்பவர்களும் தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டு வரலாம்.
இதிலுள்ள தாமிரச்சத்து, உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.. காலையில் வெறும் வயிற்றில் ஒரு சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால், அமிலத்தன்மையை சீராக்கிவிடும்.. வயிற்றிலும் புண்களும் ஏற்படாது. அல்லது சிறிது வெந்தயத்தை ஊற வைத்து, அதனுடன் சீதாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டாலும் குடல் புண்களும் ஆறிவிடும்.. அதேபோல, சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் நீங்கிவிடும்..
வாத நோய்: வாத நோய்களுக்கு இந்த பழம் ஏற்றதாக உள்ளது.. இந்த பழத்திலுள்ள மக்னீசியம், உடலிலுள்ள நீர்த்தன்மையை சமநிலைப்படுத்துவதுடன், மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் தடுத்துவிடுகிறது. அதனாலதான், ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு சீதாப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இந்த பழங்கள் தசைகளின் பலவீனத்தை எதிர்த்துப் போராட கூடியது.. மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாத நோய்களை போக்கக்கூடியது இந்த பழங்கள். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் பலத்தை தரக்கூடிய பழமாக சீத்தாப்பழம் விளங்குகிறது. வெறும் வயிற்றில் இப்பழத்தை சாப்பிடாமல், காலை உணவுடன் அல்லது எல்லா வேளையும், உணவுடன் சேர்த்து எடுத்துகொள்ளலாம்.
சர்க்கரை நோயாளி: இதிலுள்ளது சர்க்கரை இயற்கையானது என்றாலும், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், குறைவாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தை குறைவாக சாப்பிடலாம் என்கிறார்கள்.. ஆனால், காயாக இருக்கும்போது சாப்பிட்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.
சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். சீதாப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையை பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலைமையில் இருக்கும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications