சர்க்கரை வள்ளிக்கிழங்கும், வெயிட் லாஸூம்.. மரவள்ளிக்கிழங்கு + கருணைக்கிழங்கு.. ஒரே ஆச்சரியமா இருக்கே
சென்னை: கிழங்கு வகைகள் என்றாலே உடல் எடையை அதிகப்படுத்திவிடும் என்று உணவில் தவிர்த்து விடுவார்கள்.. ஆனால், சில கிழங்குகள் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
கருணைக்கிழங்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதுதான் ஆச்சரியமான உண்மை. காரணம், குடலில் கிருமி சேராமல் தடுத்து, கொழுப்பு அதிகமாக சேர்வதை குறைக்கிறது இந்த கருணைக்கிழங்கு..

"குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு" என்றே பொன்மொழி உண்டு. அந்த அளவுக்கு கொழுப்பு சத்தை கரைக்க கூடியது.
நார்ச்சத்துக்கள்: அதாவது, கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணை கிழங்கு தடுக்கிறது... நச்சுக்களையும் வெளியேற்றும் நல்மருந்தாக இருப்பதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது.. வாரம் 2 முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டாலே உடல் எடை குறைய துவங்குமாம். இரண்டு மாதங்கள் தொடர்ந்து கருணைக்கிழங்கை சாப்பிட்டால், கனத்த உடல் கரைந்திடும் என்கிறார்கள்.
சேப்பங்கிழங்கு: சேப்பங்கிழங்கு எடையை குறைப்பதில் பயனுள்ளதாக உள்ளது.. இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும் என்பதால், பசி எடுக்காமல் இருக்கும். அதிகப்படியான கலோரி சாப்பிடுவதையும் இது குறைக்க உதவுகிறது.
சேப்பங்கிழங்கில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சேப்பங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மரவள்ளிக் கிழங்கிலுள்ள நார்ச்சத்து, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, எடையை குறைக்க உதவுகிறது..
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: ருசி + ஆரோக்கியம் இரண்டுமே கலந்ததுதான் சர்க்கரைவள்ளி கிழங்கு.. இனிப்பு சுவையை தருவதற்கு காரணம், இதிலுள்ள மாவுப்பொருள்தான்.. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
வைட்டமின் A,D,C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சுவாச பிரச்சினை உடையவர்களுக்கும், மூட்டுவலி பிரச்சினை இருப்பவர்களுக்கும், வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கும், சர்க்கரை வள்ளிக்கிழங்கைதான் பரிந்துரை செய்வார்கள்.
காலை உணவு: சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகள், கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்..

நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகமாக துரிதப்படுத்தும்... மேலும், பசியை கட்டுப்படுத்துவதுடன், வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
சுட்டு சாப்பிடலாம்: அந்தவகையில், எடையை குறைக்க, வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை காலை உணவாகவே எடுத்து கொள்ளலாம்.. அல்லது இந்த கிழங்கை சாலட் போலவும், அடுப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அடுப்பில் இந்த கிழங்கை சுட்டு எடுத்து, அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, மிளகுதூள், சீரக தூள், பிளாக் சால்ட், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் கூடுதல் ருசியை தரும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications