முருங்கை விதை.. முருங்கைக்காயை போல டபுள் பலன்.. விதவித நோயை தீர்க்கும் முருங்கையின் விதைகள்.. சபாஷ்
சென்னை: முருங்கைக்காயின் நன்மைகள் பற்றி தெரியும்.. ஆனால், முருங்கை விதைகளின் நன்மை தெரியுமா? கால்சியம் குறைப்பாட்டை இந்த முருங்கை விதைகள் எப்படி தீர்க்கின்றன தெரியுமா?
முருங்கைக்காயை போலவே அதிக சத்துக்கள் நிறைந்தது முருங்கை விதையாகும்.. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த விதைகள் வரப்பிரசாதமாக திகழ்கின்றன என்றே சொல்லலாம்..

இந்த முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே, ஆண்மை குறைபாடுகளை போக்குவதற்காக தயாரிக்கப்படும் லேகியங்களில் இந்த முருங்கை விதைகள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மூல காரணம், இந்த விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் ஒளிந்திருப்பதுதான்.
விந்தணுக்கள்: முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். நரம்புகள் வலுப்பெறும். அல்லது பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்து கெட்டிப்படுவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பார்கள்.. நரம்புகளும் வலுபெறும்.
முருங்கைக்காயில் உள்ள விதைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து, பவுடராக அரைத்து, சலித்து எடுத்து கொள்ள வேண்டும். பசும்பாலில் இரவு 21 நாட்கள் கலந்து இந்த பவுடரை கலந்து குடித்து வந்தால், ஆண்களுக்கு நலன் கிடைக்கும். ஆனால், மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல், ஆலோசனையில்லாமல், முருங்கை விதை பொடியை எடுத்து கொள்ளக்கூடாது.
ரத்தசோகை: அனிமிக் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த விதை, பேருதவி புரிகிறது.. ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாக இருப்பதால், இந்த பவுடரை உணவில் சேர்த்து கொள்ளத வேண்டும். 48 நாட்கள் பாலில் சாப்பிட்டு கலந்து குடித்து வந்தால், சோகை பிரச்சனை நீங்கிவிடும்..
முருங்கையின் விதைகளில் ஜிங்க் நிறைய இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குப்படுத்தி, சீராக பராமரிக்க துணைபுரிகிறது.. இதனால், சர்க்கரை நோய் வராமலும் தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், இந்த பொடியில் சூப் போல செய்து சாப்பிடலாம்.
கொழுப்புகள்: இதயத்தை காக்கக்கூடியது இந்த பொடி.. காரணம், இதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் முருங்கை விதையின் பங்கு அபாரமாக உள்ளதாக சொல்கிறார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும் இந்த பவுடரை, கூட்டு, சூப், ரசம் என ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.
இந்த முருங்கை விதையானது கால்சியம் பிரச்சனையையும் தீர்க்கிறது. வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கெல்லாம் காரணம் கால்சியம் குறைபாடுதான்..
எலும்பு தேய்மானங்கள்: எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தாலும், எளிதாக நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும் எலும்பு தேய்மான பாதிப்பு வரக்கூடும்.. கால்சியம் பிரச்சனையும் வரக்கூடும்.. மூட்டு வலி பிரச்சனையும் வரக்கூடும். அவ்வளவு ஏன்? சத்தான சாப்பாடு இல்லாத குழந்தைகளுக்கும் மூட்டு வலிகள் வந்துவிடுகின்றன. இதற்கெல்லாம் ஒரே மருந்தாக இந்த முருங்கை விதை பயன்படுகிறது.
இதற்கு என்ன செய்ய வேண்டும். முருங்கை விதைகள் நாட்டு மருந்து கடையிலேயே எளிதாக கிடைக்கும். அல்லது முருங்கைக்காயில் உள்ள விதைகளை தனியே எடுத்து சேகரித்து வைத்து கொள்ள வேண்டும்.
கால்சியம் : ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் 5 கிராம் முருங்கை விதைகளை கொட்டி வறுத்து பொடித்து கொள்ள வேண்டும்... இந்த பொடியை, பாலில் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் போதும்.. அல்லது அல்லது காபி, டீ தூள் போலவே இந்த முருங்கை விதை பொடியை தயாரித்தும் குடிக்கலாம்.. இதனால், கால்சியம் குறைபாடு நீங்கும்.. எலும்பு பிரச்சனை, எலும்பு தேய்மானம் தீரும். முழங்கால் வலி, மூட்டு வலி தீரும்.. கால் வீக்கம் குறையும்..!!!












Click it and Unblock the Notifications