மூட்டுகளில் மொடக்கு படக்குனு சத்தம் கேட்குதா.. இந்தாங்க குங்கிலியத்தை பூசுங்கள்.. அப்பறம் மேஜிக்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூட்டு வலியை குணமாக்கும் அற்புத மருந்தாக பூனைக்கண் குங்கிலியம் பயன்படுகிறது. இதன் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

வயதானவர்களுக்கு மூட்டு ஜவ்வு தேய்ந்து அவர்களுக்கு நாளடைவில் மூட்டு வலி ஏற்படுகிறது. இதனால் அவர்களால் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படுகிறது. டாய்லெட்டில் உட்கார முடியாத நிலை வருகிறது.

Do you know the health benefits of Poonaikkann kungiliyam?

மேலும் கீழே உட்காரவே முடியாது. அப்படி உட்கார்ந்து விட்டால் குழந்தை போல் தவழ்ந்து எதையாவது பிடித்துக் கொண்டுதான் எழுந்திருக்க வேண்டும். இப்படி பலர் மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக செய்யாத வைத்தியம் இல்லை என சொல்லலாம்.

முன்பு வயதானவர்களிடம் மட்டுமே இந்த பிரச்சினை பரவி இருந்த நிலையில் தற்போது 40 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மூட்டை பிடித்துக் கொண்டு வலியால் துடிக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் அருமருந்து உள்ளது. அதன் பெயர் பூனைக்கண் குங்கிலியம் ஆகும்.

கருமருது எனும் மரத்தை கீறி அதில் வடுக்களை உண்டாக்கி அதிலிருந்து வடியும் பிசினை சேகரித்து பயன்படுத்தப்படுகிறது. இது உருண்டையாக இருக்கும். மஞ்சள் அல்லது தங்க நிறத்தில் இருக்கும். பூனைக்கண் போன்று இருப்பதால் அந்த பெயரில் அழைக்கிறார்கள். இந்த குங்கிலியத்தை சிறிய துண்டு நெருப்பில் போட்டு வைத்தால் அதிலிருந்து வரும் புகை வீட்டில் இருக்கும் விஷக் காற்றை சுத்தம் செய்யும்.

மூட்டு வலி பிரச்சினைக்கும் நல்லதொரு பலனை கொடுக்கும். குங்கிலியம் சேர்த்து தயாரிக்கும் எண்ணெய்யை மூட்டு வலிக்கு பயன்படுத்துகிறார்கள். குங்கிலியம் 100 கிராம் பொடி எடுத்து கொண்டு அரை லிட்டர் நல்லெண்ணெய்யை கொண்டு இந்த தைலத்தை தயாரிக்கலாம். நல்லெண்ணெய் இலேசாக சூடாக்கி அதில் குங்கிலியம் தூள் கலந்து இறக்கி வைக்க வேண்டும். இதை ஆறவிட்டு இரவு நேரங்களில் லேசாக வெதுவெது என சூடு செய்து மூட்டு பகுதிகளில் தடவினால் பிரச்சினை நீங்கும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கூட இல்லாமல் செய்யலாம்.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக ஏற்பட்டால் பசுநெய்யுடன் 10 கிராம் குங்கிலியம் பொடியை குழைத்து காலை, மால உணவிற்கு முன்பு பயன்படுத்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர வேண்டும். அது போல் வறட்டு இருமல் நீங்கும். சிறுநீர் பாதையில் உள்ள புண்களை நீக்கும். மார்பு சளியை அகற்றும். குங்கிலியத்தை பாலில் கலந்து குடித்து வந்தால் மார்பு சளி, மூச்சுக்குழாய் பகுதிகளில் உள்ள கோழையை இளக்கும். சர்க்கரை நோயால் ஏற்படும் புண்களை குணமாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+