இரத்த சுத்திகரிப்பு.. இரத்த சோகை.. இரத்த விருத்தி.. ஹீமோகுளோபின் பெருக.. ஒரேயொரு குப்பைக்கீரை போதுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்புக்கு கீரைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அந்த வகையில், அனைவரும் தவிர்க்கவே கூடாத கீரைதான் குப்பைக்கீரை.

உலகில் சுமார் 2 பில்லியன் மக்கள் ரத்த சோகை பிரச்சனையால் பீடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, 5 வயதிற்குட்பட்ட 42 சதவீதம் குழந்தைகளும், 40 சதவீதம் கர்ப்பிணி பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) கவலை தெரிவிக்கிறது.

Health Kuppai Keerai Hemoglobin

உணவுகள்: இந்த ரத்தசோகை பிரச்சனையை முழுமையாக தீர்க்க வேண்டுமானால், இரும்புச்சத்து, வைட்டமின்C, B12 நிறைந்த உணவுகள் ரத்த விருத்திக்கு அடிப்படையாக திகழ்கின்றன.. காய்கறிகளில் கத்தரிக்காய், பீட்ரூட், பீன்ஸ், என இரும்புச்சத்து நிறைந்தவை தாராளமாக சாப்பிடலாம்.. ஃபோலிக் அமிலங்கள் உள்ள உணவுளை நாம் உட்கொள்ளும்போது, இந்த குறைபாடுகள் நீங்கும்.

அதேபோல, வைட்டமின் C நிறைந்த சிட்ரஸ் பழங்களான, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், ஆரஞ்ச் போன்றவை ரத்த விருத்திக்கு உதவியாக இருக்கின்றன. இதில், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை தவிர்க்காமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

நோய்கள்: ரத்தசோகை என்றாலே அதை எளிதில் சரிசெய்யக்கூடியவை கீரைகள்தான். ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14 - 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவுக்கு கீழே குறையும்போதுதான், அது ஹீமோகுளோபின் குறைபாடாக மாறுகிறது. இந்த குறைபாடுகளே, பிற நோய்களும் காரணமாகிவிடுகிறது.

அந்தவகையில், முருங்கைக்கீரை முக்கியமானது.. முருங்கையிலையை எப்படி சமைத்து சாப்பிட்டாலும், நன்மையே கிடைக்கும்.. ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு இப்படி இன்னும் 300 நோய்களுக்கு முருங்கைக்கீரையே அருமருந்தாகும்.

இரும்புச்சத்து: பாலக்கீரையிலும் இரும்பு சத்துக்களும், வைட்டமின்கள் அதிகம் உள்ளன. உடலின் ரத்த அளவை அதிகரிக்க செய்யக்கூடிய பாலக்கீரையை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலை இயற்கை நமக்கு அளித்த கொடையாகும். அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்துள்ளன.. இந்த போலிக் ஆசிட் என்பது, நம்முடைய முக்கியமாக உடலில் உள்ள இரும்புச்சத்தை ஈர்ப்பதற்கு அடித்தளமாகிறது. கர்ப்பிணிகள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தைகள் எந்தவித குறையும் இல்லாமல் பிறக்குமாம். வெள்ளை கரிசலைக்கீரையையும், புளியங்கீரைகளும், அனிமீயா பிரச்சனையை தீர்ப்பதுடன், கண் சம்பந்தமான நோய்களையும் தடுக்கின்றன.

கண் பார்வை: ரத்த சோகை நோயை குணப்படுத்தக்கூடிய குப்பைக்கீரையை யாரும் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. பலரும் அறிவதில்லை.. வைட்டமின்கள் A, C சத்துக்கள் உள்ளதால், நோயெதிர்ப்பு செயல்பாடுகள் கூடுதலாக இந்த கீரையில் கிடைக்கின்றன.. சருமத்தை பாதுகாப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை இந்த கீரை செய்யும் நன்மை ஏராளம்..

குப்பை கீரைகள் உடற்சூட்டினை தணிக்கின்றன.. சொறி சிரங்குகளை போக்குகின்றன.. நுரையீரல் தொடர்பான பிரச்சனை அண்டவிடாமல் தடுக்கின்றன.. வயிற்றுப் புண்ணையும், வாய்ப்புண்ணையும் ஆற்றுகின்றன.

இளமை தோற்றம்: இரும்புச்சத்து, கால்சியமும் நிறைய உள்ளதால், ரத்தசோகை உள்ளவர்கள் குப்பைக்கீரையை சமையலில் தவிர்க்கக்கூடாது.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த கீரையை சாப்பிட்டு வருபவர்களுக்கு, வயதான தோற்றம் தள்ளிப்போடப்படுவதுடன், இளமையான தோற்றத்தையும் நீடிக்க வைக்கிறது.

வல்லாரையை குழந்தைகளுக்கும் தந்து பழக்க வேண்டும்.. ரத்தசோகை அண்டாமல் இருப்பதுடன், வல்லாரை சாப்பிட்டு வருபவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படவே வாய்ப்பிருக்காதாம்.. யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கும், கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் வல்லாரை கீரைதான் மருந்தாகின்றன.. இதில் இரும்புச் சத்து நிறைவாக பாலக்கீரையையும் சேர்த்து கொள்ளலாம். இந்த கிரையில், ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+