ஆட்டிறைச்சியை ஆன்லைனில் ஆர்டர் பண்றீங்களா? ஆட்டுக்கறியில் 3 டைப்! மட்டனில் கொழுப்பு அதிகமாகுமா? அடடா
சென்னை: நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், ஆட்டுக்கறியை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது.. உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என உடலுழைப்பு அதிகமுள்ளவர்கள் குறிப்பிட்ட அளவில் மட்டனை சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும் ஆட்டுக்கறியை சாப்பிட்டால் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? இதுக்குறித்து உணவு ஆலோசகர் டாக்டர். அருண்குமார் சொல்வதென்ன தெரியும்? அவைகளை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது.. அந்த ஆய்வில், இதயநோய் அபாயத்துக்கு காரணம் நிறைவுற்ற கொழுப்புகள்தான்.. நிறைவுறா கொழுப்பு எனப்படும் அன்சேச்சுரேட்டட் ஃபேட்ஸ், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கின்றன.

ஆய்வுகள் சொல்வதென்ன
இந்த நிறைவுறா கொழுப்பு, ஆட்டுக்கறியில் அதிகமாக உள்ளது. எனவே, மட்டனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆட்டுக்கறியில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இதன்காரணமாக, உடலில் பொட்டாசியம், சோடியம் அளவினை சீர்செய்ய முடிகிறது என்று மற்றொரு ஆய்வில் தெரியவந்தது.
ஆட்டுக்கறியை வேகவைத்து, கிரில் செய்து, சாப்பிடும்போது, உடலுக்கு வலு கிடைப்பதுடன், உஷ்ணமும் குறைகிறது. தோல் நோய்களும், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நெருங்குவதில்லை என்றும் தெரியவந்தது..
உடலில் கொழுப்பு அதிகரிக்குமா
இந்நிலையில், உணவு ஆலோசகர் டாக்டர். அருண்குமார் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஆட்டுக்கறி சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு அதிகரிக்குமா? என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"முதலில் கொலஸ்ட்ரால் என்றால் என்ன என்பதே பலருக்கும் தெரியவில்லை. கொலஸ்ட்ரால் என்பது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகக்கூடிய , நம்முடைய செல் சவ்வுகளிலுள்ள ஒருசில அளவிலான ஒரு கெமிக்கல் ஆகும்..
இந்த கொலஸ்ட்ரால் நம்முடைய உடலுக்கு தினமும் சுமார் 2000 மில்லி கிராம் தேவைப்படக்கூடுகிறது. கொலஸ்ட்ரால் என்பது வேறு, கொழுப்பு என்பது வேறு. கொழுப்பு என்பது நம்முடைய உடலில் ஆங்காங்கே கிலோ கணக்கில் தேங்கியிருக்கும்.
மாவுச்சத்து உணவை குறைக்க வேண்டும்
பொதுவாக நம்ம ஊர்களில் ட்ரைகிளிசரைடு என்ற கொழுப்பின் அளவு தான் அதிகமாக இருக்கும். இந்த ட்ரைகிளிசரைடுகளை அதிகமாக கொண்டவர்கள் ஆட்டுக்கறியை சாப்பிடலாம், ஆனால் மாவுச்சத்துள்ள உணவை குறைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சர்க்கரை, ஸ்நாக்ஸ், இட்லி, தோசை, சாதம் போன்றவற்றை குறைக்க வேண்டும். இவைகளை குறைத்தாலே ட்ரைகிளிசரைடுகளின் அளவும் குறைந்துவிடும்.
ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகமாக இருந்தால், உடலில் மாவுச்சத்தை செயல்படுத்தும் திறன் குறைவாகவும், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அதிகமாகவும் உள்ளதாக அர்த்தம். எனவே ட்ரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள் மட்டன், சிக்கனை சாப்பிடுவதை நிறுத்துவதால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை. மாவுச்சத்துள்ள உணவை குறைத்தால் மட்டுமே இது சாத்தியம்.
எல்டிஎல் கொலஸ்ட்ரால்
எல்டிஎல் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், ஆட்டுக்கறியை சாப்பிடக்கூடாதா என்று கேட்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை கட்டாயம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது உணவில் உள்ள கொலஸ்ட்ரால் நேரடியாக கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில்லை.
சொல்லப்போனால் ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்கு 2000 மிகி கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இதற்காக உணவிலுள்ள கொலஸ்ட்ராலை எடுக்கும்போது, அது எல்டிஎல் அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது...
பொதுவாக ஆன்லைனில் மட்டன் என்று தேடும்போது, பெரும்பாலும் செம்மறி ஆட்டுக்கறியைப் பற்றிய செய்தியே கிடைக்கும்.. செம்மறி ஆடு என்பது முதிர்ச்சி அடைந்த ஆடு. இளம் செம்மறி ஆடு என்பது லாம்ப்.. ஆனால் நம்மூர்களில் மட்டன் என்பது வெள்ளாடு அதாவது கோட்.
3 வகையான ஆட்டுக்கறி
எனவே மட்டன் என்று குறிப்பிட்டாலும், 3 வகையான ஆடுகளும் வெவ்வேறு தன்மையை கொண்டவை... இப்போது இந்த 3 வகையான ஆடுகளின் கொலஸ்ட்ராலை ஒப்பிட்டு பார்த்தால், 100 கிராம் செம்மறி ஆட்டுக்கறியில் 138 மிகி கொலஸ்ட்ராலும், இளம் செம்மறி ஆட்டுக்கறியில் 120 மிகி கொலஸ்ட்ராலும், வெள்ளாட்டுக்கறியில் 80 மிகி கொலஸ்ட்ராலும் உள்ளது. எனவே உணவின் மூலம் பெறக்கூடிய கொலஸ்ட்ரால் அவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது" என்று டாக்டர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications