முதலிரவில் பெரும்பாலான ஆண்கள் "அந்த" விஷயத்தில் சொதப்புவது ஏன்? மருத்துவர்கள் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் முடிந்த கையோடு முதல் இரவு குறித்து ஏராளமான எதிர்பார்ப்புகள் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்கள், தங்களின் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்ற மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால், முதல் இரவில் பல ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு தொடங்கி விரைவான விந்து வெளியேற்றம் வரை பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது குறித்து பாலியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்!

திருமண முதல் இரவு என்பது உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் புதிய அனுபவமாகும். "என் மனைவி என்ன நினைப்பார்?" என்பது தொடங்கி "எதாவது தவறாகிவிட்டால் என்ன செய்வது?" என்பது வரை மனதில் 10008 சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த எண்ணங்கள் தான் பெரும்பாலும் ஆண்களின் மனதில் முதலிரவின் போது அதிகமாக ஓடுகின்றன.

First Night Anxiety in Men

முதலிரவு

இந்த பதற்றம் அதிகரிக்கும் போது, மூளையில் உள்ள அமிக்டலா என்ற பகுதி செயல்பட்டு, உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்களை அதிகமாக சுரக்க வைக்கிறது. இவை உடலை அவசரநிலை மோடிற்கு தள்ளுகிறது. இந்த பதற்றம் காரணமாக ஆணுறுப்புக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தற்காலிகமாக விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படலாம். அதேபோல் இதய துடிப்பு அதிகரிப்பது, வேகமான சுவாசம், பதற்றம் ஆகியவை பாலியல் தூண்டுதலையும் பாதிக்கின்றன.

ஓவர் ஆர்வம்

திரைப்படங்கள், ஆபாச வீடியோக்கள், நண்பர்களின் கதைகள் என எல்லாமே முதலிரவு அன்று ஆண்களின் தலைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். இது முதலிரவு குறித்த தவறான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. முதல் இரவே சிறப்பாக இருக்க வேண்டும்.. நீண்ட நேரம் உடலுறவு நீடிக்க வேண்டும்.. அதுவே ஆண்மையின் அடையாளம் என ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடும். இதனால் உடலுறவு என்பதால் இயற்கையாக இல்லாமல்.. கிட்டத்தட்ட ஒரு பரீட்சை போல மாற்றிவிடுகின்றன. இதனால் மனஅழுத்தம் மேலும் அதிகரித்து, ஆண்கள் சொதப்பிவிடுகிறார்கள்.

பதற்றம்

முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது, உடலும், மூளையும் பல புதிய உணர்வுகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்கின்றன. இதனால் அதிக உற்சாகம், பதற்றம், இதய துடிப்பு, வியர்வை, கவனச்சிதறல் போன்றவை ஏற்படும். இதன் காரணமாக சிலருக்கு விரைவில் விந்து வெளியேறலாம் அல்லது விறைப்புத்தன்மை குறையலாம். இதை பார்த்தவுடன் பதறி விட வேண்டாம்.. இது நிரந்தர பாலியல் பிரச்சினை அல்ல என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முதல் இரவு என்பது திறமையை நிரூபிக்கும் பரீட்சை இல்லை.. அது நம்பிக்கையும், அன்பும் உருவாகும் தொடக்கம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவசரப்படாமல் மெதுவாக நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடலுறவை காட்டிலும் மனநெருக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும். ஓவராக யோசிக்காமல் நார்மலாக இருங்கள். கடுமையான சோர்வுடன் முதல் இரவுக்கு செல்லக் கூடாது.

மனைவி

அதேபோல கணவருக்கு பதற்றம் இருந்தால், அதை தோல்வியாக பார்க்காமல் மனைவி புரிந்து கொள்ள வேண்டும்.! குறை கூறாமல், பொறுமையுடனும், ஆதரவுடனும் நடந்து கொள்வது கணவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். முதல் இரவு அல்லது தொடக்கத்தில் மட்டும் இதுபோல ஏற்பட்டால் அது நாமர்மல் தான். ஆனால், சில வாரங்கள் அல்லது மாதங்களாகவும் இதே பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், பாலியல் அல்லது சிறுநீரக நிபுணரை அணுகுவது நல்லது.

இது சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. உங்களுக்கு ஏதேனும் உடல்நிலை அல்லது மனநிலை பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுக வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+