அமுக்கிரா கிழங்கு சூரணத்தின் அதிசயம்.. பெண்கள், ஆண்களுக்கு அவசியமான அஸ்வகந்தா பொடி.. ஆரோக்கிய மூலிகை
சென்னை: பெண்கள் தவிர்க்கவே கூடாத மூலிகை என்ன தெரியுமா? அதுதான் அமுக்கிரா கிழங்கு.. இந்த மூலிகை கிழங்கு தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? அமுக்கிரா கிழங்கு சூரணம் தரும் பலன்கள் என்னென்ன? எந்தெந்த நோய்க்கு இந்த மூலிகை உபயோகமாகிறது? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
உடலுக்கு ஊட்டத்தையும், ஆற்றலையும் தரக்கூடியது, மனதுக்கு உற்சாகத்தையும் தரக்கூடியது இந்த கசப்பு சுவை கொண்ட அமுக்கிரா கிழங்கு.. மூளை செல்களை தூண்டி, அதிக புத்துணர்ச்சியை வழங்குவதால், சீரான இதய துடிப்பு நடப்பதுடன், மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடிகிகிறது. மூளையின் செயல்பாட்டையும் ஊக்குவிப்பதுடன், மூளையின் அழற்சியிலிருந்தும் விட உதவுகிறது.

வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு என அனைத்துக்குமே இந்த கிழங்கு மருந்தாகிறது. அமுக்கிரா கிழங்கை அப்படியே அரைத்தும் பயன்படுத்தலாம்.. அல்லது பொடி செய்தும் பயன்படுத்தலாம்.
ஆண்களுக்கு விந்துக்களை பெருக்கும் தன்மை கொண்டதாக இந்த அமுக்கிரா கிழங்கு கருதப்படுகிறது. எனவே, இந்த பொடியை, தேனுடன் கலந்து சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்பார்கள்.. சீமை அமுக்கிரா பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிடும்போது, விந்து எண்ணிக்கை பெருகும் என்பார்கள்..
அமுக்கிரா கிழங்கு: அல்லது இந்த கிழங்கை சுத்தம் செய்து தூள் செய்து வைத்து கொண்டு, நரம்புத்தளர்ச்சி உள்ள ஆண்கள் பசும்பாலில் இந்த பொடியை கலந்து, கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால், எலும்பு தேய்மானம், நரம்பு தளர்ச்சி உட்பட, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் விலகும்..
குறிப்பாக, அதாவது, அமுக்கிரா கிழங்கு பொடி 1 பங்கு, கற்கண்டு 3 பங்கு சேர்த்து, காலையும் மாலையும் பசும்பாலுடன் 4 கிராம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நீங்கும். அத்துடன் உடலுக்கு பலத்தையும் தரும்.. ஆண்களுக்கு சிறிய வயதிலேயே ஏற்படும் வழுக்கை பிரச்சனைக்கும், இந்த பொடியே மருந்தாகிறது.
மாதவிடாய்: மாதவிடாய் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த பொடி அருமருந்தாகும்.. இடுப்பு வலி அதிகமாக இருந்தால், அமுக்கிரா கிழங்கை பசும்பால் விட்டு விழுதாக அரைத்து அதை கொதிக்க வைத்து, பற்றுபோல போடுவதால் நிவாரணம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை இருந்தாலும், அதற்கும் இந்த பொடி துணைபுரிகிறது. தைராய்டு இருந்தாலும் நீங்கிவிடும்.
இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் பசியின்மை மெல்ல குறையும். அதுமட்டுமல்ல, அமுக்கராவை தனியாக சாப்பிட்டால் உடல் குண்டாகிவிடும் என்பார்கள். ஆனால், அது தவறான கருத்து. உண்மையை சொல்லப்போனால், அமுக்கராக்கிழங்கு தூளை சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்குமாம்.உடல் எடை குறைய வேண்டுமானால், இக்கிழங்கின் பவுடரை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை குறைய துவங்கும்.
டாக்டர் ஆலோசனை: அமுக்கரா கிழங்கை அரைத்து பவுடர் செய்யும் சூரணம்தான், அஸ்வகந்தா பொடி என்பார்கள். இந்த சூரணம், வாத வலிகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளன. 1 ஸ்பூன் அமுக்கிரா பொடியை, 3 ஸ்பூன் பாலில் கலந்து காலை, மாலை 2 வேளையும் சாப்பிடுவதால் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.. இத்தனை நோய்களுக்கும் தீர்வாக அமுக்கிரா கிழங்கு திகழ்ந்தாலும், மருந்தாக உட்கொள்ளும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். அதுவே சிறந்த ஆரோக்கியமாகும்.












Click it and Unblock the Notifications