வெறும் வயிற்றில் 10 "கறிவேப்பிலை" சாப்பிடுங்க.. சட்டென அந்த மாற்றத்தை கவனியுங்க.. வாவ் கறிவேப்பிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாப்பாட்டில் தூக்கி வீசப்படும் கறிவேப்பிலையில் இரும்பு சத்து இருக்கிறது என்று தெரியும்.. கறிவேப்பிலை சாப்பிடுவதால், தலைமுடி நன்றாக வளரும் என்று தெரியும்.. ஆனால், வெறும் வயிற்றில் பச்சை கறிவேப்பிலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
சித்த மருத்துவத்தில், கறிவேப்பிலைக்கென்று தனி இடம் உள்ளது.. எதிர்ப்பு சக்தியாக திகழ்வதுடன், தோலின் நிறத்தையும் பொலிவுடன் வைத்திருக்க கறிவேப்பிலை உதவுகிறது. இளநரையை தடுப்பதில் கறிவேப்பிலைக்கு இணை வேறு கிடையாது.. கறிவேப்பிலையை அடிக்கடி பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற கொழுப்பும் சேராது...

Health benefits of Curry Leaves and and Do you know Amazing Health Uses of Curry Leaf

கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்தான் இந்த கறிவேப்பிலை. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..

இந்த கறிவேப்பிலை இலையை, நிழலில் உலரவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை..

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில், வாந்தி வரும்.. பசியின்மை, தலைசுற்றல் இருக்கும்.. செரிமான தொந்தரவும் நிறைய வரும்.. அப்போது, கறிவேப்பிலை பொடியை சாதத்தில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் தொந்தரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும். அனிமீயா உள்ளவர்கள், இந்த கறிவேப்பிலையை அடிக்கடி சட்னி செய்து சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்... நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவும்..

Health benefits of Curry Leaves and and Do you know Amazing Health Uses of Curry Leaf

இதய பாதிப்புகள்: இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.. தலைமுடி நன்றாக கருகருவென வளரும்.. கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் முழுவதுமே வெளியேறிவிடும்... அத்துடன் கல்லீரலுக்கும் பாதுகாப்பு தரும்.

மோருடன் பச்சை கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வந்தால், குமட்டல், வாந்தி பிரச்சனை நிற்கும்.. பச்சை கறிவேப்பிலையில் சாறு எடுத்து, அந்த சாற்றினை வயதானவர்கள் குடித்து வந்தால், பார்வை கோளாறுகளை தடுப்பதுடன், முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

மகிமைகள்: காசு கொடுத்து வாங்கி வரும் காய்கறிகளில், இலவசமாக ஒட்டிக் கொண்டு வரும், கறிவேப்பிலையில்தான் எத்துணை எத்துணை மகிமைகள்??!!! நமக்கு வேண்டாம் என்று, தட்டில் ஒதுக்கிவைக்கப்படும் இந்த கறிவேப்பிலையை வைத்துதான், மருத்துவ ஆய்வுகள் இன்னமும் நடந்து கொண்டேயிருக்கின்றன.. பிள்ளைகள் இனியாவது கறிவேப்பிலையை தூரப்போட்டுவிட வேண்டாம் ப்ளீஸ்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+