கருணைக்கிழங்கு தரும் நல்ல நல்ல பயன்கள்.. கண்டிப்பாக இருக்குது கருணை.. பெண்களின் ஆரோக்கிய அருமருந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: 40 வயதுள்ள பெண்கள் கருணைக்கிழங்கை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் சொல்வது ஏன் தெரியுமா? வெள்ளைப்படுதல், சீரற்ற மாதவிடாய் இருந்தால், இந்த கருணையை எப்படி உணவாக சாப்பிடலாம்? இதோ எளிய குறிப்பு

கருணைக்கிழங்குகளில் புரதம், வைட்டமின் A சத்துக்கள் உள்ளன. ரத்த அழுத்தத்தை சீர்செய்யக்கூடிய தன்மை இந்த கிழங்குகளுக்கு உண்டு.. எனவே, மாரடைப்பு, கேன்சர் போன்ற அபாயங்களை நெருங்க விடாமல் தடுக்கிறது.. முக்கியமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சக்தி கருணைக்கு உண்டு.

elephant yam karunai kizhangu

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்குகள் நார்ச்சத்து மிகுந்தவை. இதனால், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றிவிடுவதால், குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது, ஈரலுக்கு பலம் பெறுகிறது.. நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த கருணைக்கிழங்கு.. நெஞ்செரிச்சல், குடல் புண்கள், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றக்கூடியது..

எனினும், ஆஸ்துமா நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள், மருத்துவர்களின் அனுமதியை பெற்றே சாப்பிடுவது சிறந்த ஆரோக்கியமாகும்.

ஆஸ்துமா: ஆனால், பெண்கள் தவிர்க்கவே கூடாத கிழங்கு என்றால் அது இந்த கருணைதான்.. இளம் பெண்கள் முதல் 40 வயதுக்கு மேற்பட்டோர் வரை, சந்திக்கக்கூடிய அனைத்து உடல்ரீதியான பிரச்சனைகளுக்கும் இந்த கருணைக்கிழங்கு மருந்தாகிறது.

1. மாதவிடாய் சமயத்தில், இடுப்பு வலி, கை, கால் குடைச்சல், வலிகளை இந்த கருணை போக்குகிறது.. பெண்களின் உடலில் காணப்படும் பாலியல் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனை சரிவிகிதத்தில் காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது.. ஏனென்றால், இந்த ஹார்மோன் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ பெண்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்துவிடும்.

ஈஸ்ட்ரோஜன்: சரியான மாதவிடாய் ஏற்பட வேண்டுமானால், இனப்பெருக்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஈஸ்ட்ரோஜன் சரிவிகிதத்தில் கட்டாயம் தேவையாக உள்ளது.. இதற்கெல்லாம் கருணைக்கிழங்குகள் முக்கிய உணவாகும்.. ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக இருப்போரும் கருணைக்கிழங்கை உணவில் தவறவிடக்கூடாது.

வெள்ளைப்படுதல் பிரச்சனையால் அவதிப்படும் பெண்களும், முறையற்ற மாதவிடாய் இல்லாமல் அவதிப்படும் பெண்களும், கருணைக்கிழங்கை வாரம் 2 முறை சாப்பிட்டு வரலாம்.. இந்த கிழங்கின் மூலப்பொருளிலிருந்து, மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன. எனவே மருந்தாக சாப்பிடுவதைவிட, நேரடியாகவே கிழங்காக சமைத்து சாப்பிடும்போது அதற்கு கூடுதல் சக்தி உண்டு. மெனோபாஸ் காலத்தின்போது, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தவும் இந்த கிழங்கு உதவுகிறது.

இடுப்பு வலி: கருணைக்கிழங்கினை வேக வைத்து நன்றாக மசித்து, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து மாதவிடாய் முன்பு சாப்பிட்டுவந்தால், கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் இருந்தாலும், கருணைக்கிழங்கு சமன்படுத்திவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+