தண்ணீர்விட்டான் கிழங்கு.. உடல்எடை குறையணுமா? வரிவரி கிழங்கு இருக்கே.. சூப்பர் தண்ணீர்விட்டான் கிழங்கு
சென்னை: பெண்களுக்கென்றே இயற்கை தரும் கொடைதான் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு.. தனித்துவமும், மருத்துவமும் ஒன்றுசேர்ந்த மூலிகைதான் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு.
இதன் இலைகள் ஊசி போலவே இருக்கும்.. கிளைகள் வரிவரியாக மேலே எழுவதால், "வரிவரி" என்றும் இதனை சொல்வார்கள். குளிர்ச்சியான மூலிகை.. அதனால்தான், தண்ணீர்விட்டான் கிழங்கு என்கிறார்கள்..
மூலிகைகள்: குளிர்ச்சி மட்டுமல்ல, இனிப்பும் சேர்ந்திருக்கும். இந்த மூலிகையை, மருத்துவ குணங்களுக்காகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பயிரிடப்படுகிறது.. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளிலும் இது கிடைக்கிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை, காயவைத்து இடித்து வைத்து பொடியாக்கியே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.

பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை இந்த மூலிகை தீர்க்கிறது.. தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.. மாதவிடாய் நேரங்களில் அதிகமாக ஏற்படுகிற உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.. 4 ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு ஜூஸ் எடுத்து, 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் போதும். உதிரப்போக்கு கட்டுப்படும்.
வெள்ளைப்படுதல்: அதேபோல, வெள்ளைப்படுதல் அதிகமிருக்கும்போது, தண்ணீர்விட்டான் கிழங்கை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. தண்ணீர்விட்டான் கிழங்கில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதயம், எலும்புகள், சிறுநீரகம், நரம்புகள் ஆகியவற்றின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எலும்பு, மார்பகம், பெருங்குடல், குரல்வளை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் இந்த தண்ணீர்விட்டான் கிழங்குக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராக போராட தூண்டுகிறது.
நீர்க்கட்டு: தண்ணீர் விட்டான் கிழங்கை, பாலில் சேர்த்து அரைத்து எடுத்து கொண்டு, அதை காயவைத்து, பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயும் குணமாகும் என்கிறார்கள். உடலைப் பலமாக்க கூடியது.. உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றக்கூடியது. நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் குணமாகும்.
காய்ச்சல் இருந்தால், தண்ணீர் விட்டான் கிழங்குடன், சுக்கு, மிளகு, திப்பிலி என்ற திரிகடத்தை சேர்த்து, பொடியாக்கி, தினமும் 2 கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காய்ச்சல் ஓடிவிடும்.
பலவீனம்: பலவீனமான உடம்பு இருந்தால், இந்த கிழங்கிலிருந்து 50 மிலி சாறு எடுத்து, 50 மிலி வெண்ணெய் கலந்து, அரை லிட்டர் பால் சேர்த்து நெய்யாக உருக்கி, அதனுடன் பனை வெல்லம், தேன், திப்பிலி கலந்து மருந்து செய்வார்கள்.. இதை சாப்பிடும்போது, பலவீனமான உடல் வலுப்பெரும்.
ஆண்மை பெருக வேண்டுமானால், தண்ணீர் விட்டான் கிழங்கை காயவைத்து தூளாக்கி தினமும் 1 ஸ்பூன் வீதம், 2 வேளை, ஒரு மாதம் வரை தொடர்ந்து பாலுடன் சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. கருப்பை சார்ந்த நோய்களுக்கும் மருந்தாகவும் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பயன்படுகிறது.
டாக்டர் அட்வைஸ் முக்கியம்: கால் எரிச்சல் இருப்பவர்கள், இந்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூசி வந்தால் குணமாகும்.. இப்படி ஏகப்பட்ட மருத்துவ குணம், இந்த தண்ணீர்விட்டான் கிழங்கில் இருந்தாலும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று எடுத்து கொள்வதே சிறந்தது.












Click it and Unblock the Notifications