தண்ணீர் விட்டான் கிழங்கு.. பெண்களின் கருப்பை பலம் பெற.. நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் அற்புத மூலிகை
சென்னை : பெண்களின் ஹார்மோன் பிரச்சினைகளை தீர்க்கும் சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கினை பற்றி தெரியுமா? பெண்களுக்கு இந்த கிழங்கினை அருமருந்து என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக, மாதக்கணக்கில் கூட ஏற்படும், ரத்த இழப்பானது பெண்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். இத்தகைய குறிகுணங்களுக்கு முக்கிய காரணமாக அமைவது கர்ப்பப்பையிலுள்ள கட்டிகள்தான்.

மாதாந்திர பூப்பு கோளாறு, தாமதமாகும் கருத்தரிப்பு, மாதவிடாய் காலங்களில் அதிகமான வயிற்று வலி, அதிக ரத்தப் போக்கு போன்ற நோய்க்குறிகளின் காரணங்களை எதிர்கொள்ளும் பெண்கள், ஸ்கேன் பரிசோதனையில் அதிகம் உறுதி செய்வது கர்ப்பப்பை சார்ந்த கட்டிகள் தான்.
சித்த மருத்துவம்: இதுபோன்ற கர்ப்பப்பை கோளாறுகளுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளான சிகிச்சைகள் உள்ளன.. ஏராளமான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.. குறிப்பாக, அமுக்கரா, கழற்சிக்காய், மஞ்சள், விழுதி, மந்தாரைப்பட்டை, சோற்றுக்கற்றாழை, சேராங்கொட்டை, கொடிவேலி போன்றவைகள், கர்ப்பபை சார்ந்த கோளாறுகளுக்கு மருந்தாகின்றன.. அதேபோல தண்ணீர் விட்டான் கிழங்கையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம்.
மிகவும் குளிர்ச்சியான தண்ணீர் விட்டான் கிழங்கு, நாட்டு மருந்து கடைகளில் பவுடர் வடிவில் கிடைக்கும். இனிப்பாக சுவையுடன், ஏராளமான நார்ச்சத்து நிறைந்ததுதான் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு.. பெண்களுக்கு மிகச்சிறந்த மருந்து இதுவாகும். தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டுமென்றால், இந்த மூலிகையைதான் தாய்மார்களுக்கு தருவார்களாம்.
மாதவிடாய் : மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த வேண்டுமானால், தண்ணீர் விட்டான் கிழங்கினை, ஜூஸ் போல தயாரித்து, அதில், 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் போதும். அல்லது 5 ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்கு குடித்து வந்தால் போதும்.. ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள், தண்ணீர்விட்டான் கிழங்கை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.. கர்ப்பப்பையிலுள்ள நீர்கட்டிகளின் சிகிச்சைக்கும், இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு மருந்தாகிறது.
இனப்பெருக்க ஆரோக்கியம்: இந்த கிழங்கில், ஸ்டெராய்டல் சபோனின்கள், கிளைகோசைடுகள், ஆல்கலாய்டுகள், பாலிசாக்கரைடுகள், மியூசிலேஜ்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட சேர்மங்கள் உள்ளதால், இனப்பெருக்கத்திற்கு தூண்டுகோலாகின்றன. குறிப்பாக, இதிலுள்ள பயோ ஆக்டிவ் கூறுகள், பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
கருப்பை உடலியக்கத்தையும் மேம்படுத்தி, ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகரிக்க செய்கிறது. கருமுட்டை வளர்ச்சி மற்றும் ஓவுலேஷன் செயல்முறையை மேம்படுத்துகிறது. எனவே பிசிஓடி என்று சொல்லப்படும் நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மன அழுத்தம்: மெனோபாஸ் பருவத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாக சுரப்பதால் அதிக அளவில் மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.. இதுபோன்ற நேரத்தில் தண்ணீர் விட்டான் வேரை சாறு எடுத்து 5 நாட்களுக்கு மூன்று வேளை உட்கொண்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு சரியாக சுரக்கும்.
சுருக்கமாக சொல்லப்போனால், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், கருப்பையை பராமரிக்கவும், புதிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், வெள்ளைப்படுதலை நீக்கவும் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு அருமருந்தாகின்றன..
டாக்டர் ஆலோசனை: ஏராளமான மருத்துவ நன்மைகளை இந்த தண்ணீர்விட்டான் கிழங்கில் இருந்தாலும் மருத்துவர்களின் முறையான ஆலோசனை பெற்று, மருந்தாக எடுத்து கொள்வதே சிறந்தது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications