இரத்த கொதிப்பு இருக்கா? அப்போ கவனமாக இருந்து இதை ஃபாலோ பண்ணுங்க
சென்னை: இன்று பெரும்பாலானோருக்கு இரத்த கொதிப்பு பிரச்சனை என்பது மிக சாதாரணமாக ஆகிவிட்டது. இதன் அறிகுறிகள் சிலவற்றை உடல்ரீதியாக (தூங்கி எழுந்தவுடன் தலைவலி, படபடப்பு, உள்ளங்கை, கால் மறுத்துப்போவது, கண் மயக்கம்) தெரியும், அல்லது எந்த ஒரு அறிகுறிகள் இல்லாமலேயே பாதிக்கக்கூடியவை, அதனால் தான் இதை (Slient killing disease) என்று கூட சொல்லலாம். தினமும் மாத்திரை எடுத்துக்கொண்டு, வழக்கம்போல் தங்கள் வாழ்க்கை மற்றும் உணவு முறையை மாற்றிக்கொள்ளாமல், நாட்களை கழித்துக்கொண்டு வருகின்றனர். ஆனால் இரத்த கொதிப்பு ஏன், எதனால் வருகிறது, அவற்றை இப்படி கையாள்வது என்பது பற்றி விழிப்புணர்வு இல்லாமல், மருந்து, மாத்திரைகளை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சற்று கவனத்தோடு உடல் ஆரோக்கியத்தில் அக்கறையெடுத்து, சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே ஒரு வியாதியிலிருந்து வரக்கூடிய பல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். இரத்த கொதிப்பு ஏன் எதனால் வருகிறது, அவற்றை சரிசெய்ய சிறந்த உணவு முறை என்ன என்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இரத்த கொதிப்பு (Blood pressure): எப்போதும் படபடப்பு, எல்லா விஷயத்திற்கும் டென்ஷன் ஆகக்கூடியவர்களுக்கு இரத்த கொதிப்பு பிரச்சனை வருவது இயல்பானதே. தலை முதல் பாதம் வரை நம்முடைய முழு உடலுக்கு தேவையான இரத்த ஓட்டம், இதயம் சுருங்கி, விரிந்து செயல்படும்போது இரத்தம் சென்றடைகின்றது. இதயம் சுருங்கும்போது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure) என்றும், இதயம் விரியும்போது இரத்த நாளங்கள் வழியாக கெட்ட இரத்தத்தை வெளியேற்ற இவ்விரண்டு செயல்முறைகளும் அவசியமாகும். இதயம் இந்தச் செயல்பாட்டை முறையாகச் செய்கிற வேலைகளில் மாற்றம் ஏற்படும்போது இரத்த கொதிப்பு (Blood pressure) அதிகமாகிவிடுகிறது.
ஏன் எதனால் வருகிறது?: மனஅழுத்தம், படபடப்பு, கவலை, டென்ஷன் ஆகியவற்றை இதயத்தை பாதிக்கும்போது, இதயம் சுருங்கி, விரிவடையும்போது இயல்பாக இருக்கவேண்டிய இரத்த அழுத்தம் (120/80) நிலை மாறி, இரத்த அழுத்தம் அதிகரிக்கும் (140/90). சுமார் 40 வயது எட்டும்போது, இரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும், மேலும் வயதானவர்களுக்கு (140/90) இருப்பது பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுத்தாது. இரத்த கொதிப்பு அளவு இதை விட கூடும்போது, இரத்த நாளங்களில் பிரச்சனை ஏற்படும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இரத்த அழுத்தம் கூடும்போது சில அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவரும், சிலருக்கு உள்ளுக்குளேயே அமைதியாக அழுத்தம் அதிகரித்து, திடீரென்று பாதிப்புகளை கொண்டுவரும். எனவே வயதாகும்போது அவ்வப்போது இரத்த கொதிப்பு அளவை சரிபார்த்துக்கொள்வது நல்லது. தவிர்க்கவேண்டிய உணவுகள் இரத்த கொதிப்பின் முதல் எதிரி உப்பு, மற்றும் உணவில் அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்துவது, எண்ணெய்யில் வறுத்த உணவு வகைகள் கட்டாயம் தவிர்ப்பது நல்லது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications