For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'புர்கா அவெஞ்சர்': மலாலாவின் வாழ்க்கையைத் தழுவிய கார்டூனுக்கு பாகிஸ்தானில் அமோக ஆதரவு

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பொதுவாக கார்ட்டூன்கள், குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதையும் தாண்டி அதன் மூலமும் பல சமூக மாற்றங்களுக்கு அடி கோள முடியும் என்பதற்கு உதாரணங்கள் பல.

அந்த வகையில் சமீபத்தில் பாகிஸ்தானில் சுட்டீச்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட கார்ட்டூன் தொடரான ‘புர்கா அவெஞ்சர்' ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் திரும்பி, விரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

பாகிஸ்தானில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக விரைவில் மற்ற மொழிகளிலும் பேச வருகிறாளாம் இந்த புர்கா அவெஞ்சர்.

புர்கா அவெஞ்சர்....

புர்கா அவெஞ்சர்....

பாகிஸ்தானில் உள்ள ‘ஜியோ தேஜ்' என்ற சேனலில் ஒளிபரப்பாகிய தொடர் தான் இந்த ‘புர்கா அவெஞ்சர்'. முதலில் குறுந்தொடராக ஆரம்பிக்கப் பட்ட இது, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக நம்மூரு சீரியல் மாதிரி நெடுந்தொடராக மாறப் போகிறது.

பாடகரின் இயக்கத்தில்....

பாடகரின் இயக்கத்தில்....

இத்தொடரின் இயக்குநர் பிரபல பாடகர் ஹாரூன் ரஷீத். தயாரிப்பாளரும் அவரே தான்.

மல்டிபிள் பெர்சனாலிட்டி ஹீரோயின்....

மல்டிபிள் பெர்சனாலிட்டி ஹீரோயின்....

பகலில் சாதாரண டீச்சராகவும், இரவில் கெட்டவர்களை அழிக்கும் சூப்பர் ஹீரோயினாகவும் மாறும் ஜியா என்ற பெண்ணைப் பற்றியது தான் கதை. இரவு அவதாரமான சூப்பர் ஹீரோயின் பெயர் தான் புர்கா அவெஞ்சர்.

பெண் கல்விப் போராளி....

பெண் கல்விப் போராளி....

பெண் கல்விக்கு எதிராக போராட்டி, பாகிஸ்தானிய பழமைவாதிகளை தண்டிக்கும் வேலை தான் புர்கா அவெஞ்சருடையது.

மலாலா கதை....

மலாலா கதை....

இக்கதையின் கரு, பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி தாலிபன்களால் தாக்கப்பட்டாலே சிறுமி மலாலா, அவளைத் தழுவி எடுக்கப் பட்டது தான்.

நல்ல எதிர்காலம்....

நல்ல எதிர்காலம்....

வெறும் 12 சதவீத பெண் கல்வியறிவு கொண்ட பாகிஸ்தானில் இந்தத் தொடர் ஹிட்டடித்தது பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாகவேப் படுகிறது.

தாலிபன்களுக்கு பதிலடி....

தாலிபன்களுக்கு பதிலடி....

வடக்கு மற்றும் மேற்குப் பாகிஸ்தானில் பெண்களை பள்ளி அருகேயே போக விடாமல் தொடர்ந்து தாலிபன்கள் தொல்லை கொடுத்து வரும் நிலையில், இப்படி ஒரு தொடர் வெளியானது அனைவரையுமே அசைத்துப் பார்த்துள்ளது என்கின்றன சர்வதேச மீடியாக்கள்.

நல்ல செய்தி....

நல்ல செய்தி....

இத்தொடர் குறித்து ஹாரூன் கூறுகையில், ‘சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் அடித்துத் துவைத்து பிஞ்சுகளின் மனதில் நல்ல செய்திகளைப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புர்கா அவெஞ்சர் பாத்திரத்தை உருவாக்கினேன்.

உயிர் உள்ளவரை தொடருவேன்....

உயிர் உள்ளவரை தொடருவேன்....

மலாலா தான் என் கதையின் ரோல் மாடல். எத்தனையோ கொலை மிரட்டல்களுக்கு நடுவே பாகிஸ்தான் மக்கள் இந்தத் தொடரை விரிவு படுத்த வேண்டிக் கடிதங்கள் மற்றும் போன் வாயிலாக வேண்டுகோள் வைப்பதால் புர்கா அவெஞ்சரை என் உயிர் உள்ளவரை தொடர உத்தேசித்துள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

மௌனப் புரட்சி.....

மௌனப் புரட்சி.....

பாகிஸ்தானிய சோஷியல் மீடியாக்களில் சூடான் விவாதப் பொருளாகி விட்ட ‘புர்கா அவெஞ்சர்' டிவி மூலம் ஒரு மௌனப் புரட்சிக்கு வித்திட்டு விட்டாள்.

English summary
Wonder Woman and Supergirl now have a Pakistani counterpart in the pantheon of female superheroes - albeit one who shows a lot less skin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X