For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு பள்ளியில் 13,404 காலிப்பணியிடங்கள்.. 2 லட்சம் சம்பளம்.. இன்றே விண்ணப்பிக்க கடைசிநாள்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனம் கேந்திரிய வித்யாலாயா. நாடு முழுவதும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. 25 பிராந்திய அலுவலகங்களுடன் 1252 பள்ளிகள் நாடு முழுவதும் உள்ளன. மத்திய அரசின் சிபிஎஸ் இ பாடத்திட்டத்தை கொண்ட இந்த பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்து 200 வரை கிடைக்கும் காலிப்பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 13,404 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றுதான் கடைசி நாளாகும்.

13,404 vacancies in central government school, Today is the last day, Application sheets?

எனவே தகுதியானவர்கள் இன்றைக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.. எந்தெந்த காலிப்பணியிடங்கள் உள்ளன..தகுதிகள் என்ன? சம்பள விவரங்கள் போன்றவற்றை விரிவாக கீழே காணலாம்.

எழுத்து தேர்வு, தேர்வு செய்யப்படும் முறை:

* மேலே குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு கணிணி வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் அதன்பிறகு நேர்காணல் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
* இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்து பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. சில பதவிகளுக்கு வெறும் கணிணி வழி தேர்வு மட்டுமே உண்டு. நேர்காணல் கிடையாது.
* Assistant Section Officer, Senior Secretariat Assistant, Stenographer Grade-II மற்றும் Junior Secretariat Assistant தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத்தேர்வு கிடையாது.
நிரப்பப்படும் பணியிடங்களும் அதற்கான கல்வித் தகுதிகளையும் கீழே காணலாம்.

உதவி ஆணையர் பணி

45 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம். பிஎட் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிபிசி 7-வது நிலை 12-வது சம்பள விகிதத்தில் முதல்வராக அல்லது துணை முதல்வராக / உதவி கல்வி அலுவலராக சம்பள அளவு 10 படி பணி செய்து இருக்க வேண்டும். அல்லது விரிவுரையாளராக சம்பள அளவு 8 படி பணி செய்து இருக்க வேண்டும். சம்பள அளவு 7 மற்றும் 8 படி டிஜிடி மற்றும் பிஜிடி இணைத்து 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 239 பணியிடங்கள் உள்ளன. சம்பள விகிதம் ரூ.78,800-2,09,200 ஆகும். தேர்வு கட்டணமாக ரூ.2,300 செலுத்த வேண்டும்.

பள்ளி முதல்வர் (Principal)

45 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம். பிஎட் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிபிசி 7-வது நிலை 12-வது சம்பள விகிதத்தில் முதல்வராக அல்லது துணை முதல்வராக / உதவி கல்வி அலுவலராக சம்பள அளவு 10 படி பணி செய்து இருக்க வேண்டும். அல்லது விரிவுரையாளராக சம்பள அளவு 8 படி பணி செய்து இருக்க வேண்டும். சம்பள அளவு 7 மற்றும் 8 படி டிஜிடி மற்றும் பிஜிடி இணைத்து 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 239 பணியிடங்கள் உள்ளன. சம்பள விகிதம் ரூ.78,800-2,09,200 ஆகும். தேர்வு கட்டணமாக ரூ.2,300 செலுத்த வேண்டும்.

பள்ளி துணை முதல்வர்

பள்ளி துணை முதல்வர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 50 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பிஎட் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். துணை முதல்வராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிஜிடி (PGT) அல்லது விரிவுரையாளராக 6 வருடங்கள் அனுபவம் அல்லது பிஜிடி மற்றும் விரிவுரையாளர் இணைந்து 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். கணிணி அறிவு தேவை. தேர்வுக் கட்டணமாக ரூ.2,300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள விகிதம் ரூ.56,100-1,77,500 ஆகும். 203 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

முதுகலை ஆசிரியர் (POST GRADUATE TEACHER)

ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகம், உயிரியல்,வரலாறு, கணிதம், கணிணி அறிவியல், புவியியல, உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை ஆசிரியர் பணி காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம். எந்த பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கு இணையான முதுகலை பட்டம் தேவை. பிஎட் அல்லது அதற்கு இணையான டிகிரி அவசியம். இந்தி மற்றும் ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கும் திறன் அவசியம். கணிணி அறிவும் இருக்க வேண்டும். 1,409 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்:

ஆங்கிலம், இந்தி, சமூக அறிவியல், அறிவியல், சமஸ்கிருதம், கணிதம், உடற்கல்வி, கலைக்கல்வி, வேலை அனுபவம் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பிஎட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CTET Paper-II தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்கும் திறன் வேண்டும்.

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்:

ஆங்கிலம், இந்தி, சமூக அறிவியல், அறிவியல், சமஸ்கிருதம், கணிதம், உடற்கல்வி, கலைக்கல்வி, வேலை அனுபவம் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பிஎட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CTET Paper-II தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்கும் திறன் வேண்டும். 3,176 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். சம்பளம் ரூ.44,900-1,42,400 ஆகும்.

இதில் உடற்கல்வி ஆசிரியருக்கு உடற்கல்வி இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம். கலைக் கல்வி ஆசிரியருக்கு Drawing and Painting/Sculpture/ Graphic Art- போன்ற பிரிவில் 5 வருட டிப்ளமோ அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியை திணித்தவர் ராஜாஜி.. திணிக்க கூடாது என கங்கணம் கட்டியவரும் அவர்தான்- துரைமுருகன் இந்தியை திணித்தவர் ராஜாஜி.. திணிக்க கூடாது என கங்கணம் கட்டியவரும் அவர்தான்- துரைமுருகன்

நூலகர்:

Library Science பாடத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது 1 வருட டிப்ளமோ படித்து இருக்க வேண்டும். கலிப்பணியிடங்கள்: 355
*விண்ணப்பிக்க அதிகபட்ச வயது; 35
*சம்பள விவரம்: ரூ.44,900-1,42,400/-
தேர்வுக்கட்டணம்: ரூ.1,500

முதன்மை ஆசிரியர் (இசை):

50 சதவிகித மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இசையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை:
*காலிப்பணியிடங்கள்; 303
*அதிகபட்ச வயது: 30
*சம்பள விவரம்: ரூ.35,400-1,12,400

நிதி அதிகாரி :

50 சதவீதத்துடன் பிகாம் மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம் அல்லது எம்.காம் 3 வருட அனுபவம் அல்லது CA (Inter)/ICWA (Inter)/MBA (Finance)/PGDM (Finance) மற்றும் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
*காலிப்பணியிடங்கள்; 6
*அதிகபட்ச வயது: 35
*சம்பள விவரம்: ரூ.44,900-1,42,400/-

உதவி பொறியாளர் (Civil):

சிவில் என்ஜினியரிங் தேர்ச்சி மற்றும் 2 வருட அனுபவம் அல்லது 3 வருட டிப்ளமோ மற்றும் 5 வருட அனுபவம் தேவை.
*காலிப்பணியிடங்கள்; 02
*அதிகபட்ச வயது: 35
*சம்பள விவரம்: ரூ.44,900-1,42,400/-

உதவி பிரிவு அதிகாரி:

பட்டப்படிப்பு மற்றும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்; 156
*சம்பள விவரம்ரூ.35,400-1,12,400/

இந்தி மொழிபெயர்ப்பாளர்:

*இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த முதுகலைப்பட்டம் அல்லது டிப்ளமோ மற்றும் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
*காலிப்பணியிடங்கள்; 11
*சம்பள விவரம்ரூ.35,400-1,12,400/

மூத்த உதவி செயலாளர்:

பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்: காலிப்பணியிடங்கள்: 322
விண்ணப்ப தாரர்களுக்கு அதிகபட்ச வயது: 30

ஜூனியர் உதவி செயலாளர்:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு, இந்தி மொழி தேவை: காலிப்பணியிடங்கள்; 722. சம்பள விவரம்: ரூ.25,500-81,100/-

ஸ்டெனோகிராஃபர் கிரேடு - II:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறன் தேர்வு நடத்தபபடும். காலிப்பணியிடங்கள்; 54
சம்பள விவரம்: ரூ.19,900-63,200/

முதன்மை ஆசிரியர் :

50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட டிப்ளமோ அல்லது 4 வருட டிகிரி பெற்றிருத்தல் வேண்டும். CTET (Paper-I) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்: காலிப்பணியிடங்கள்; 6414.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணிகளுக்கு விண்ணபிக்க https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 26.12.2022

English summary
Kendriya Vidyalaya is an educational institution functioning under the Education Department of the Central Government. There are Kendriya Vidyalaya schools all over the country. 1252 schools across the country with 25 regional offices. Various vacancies have been released in these schools which have CBSE syllabus of central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X