அனுபவம் வேண்டாம்.. Accenture ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலை.. உடனே விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முன்னணி ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சர்-ல் அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் (Software Development Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு முன்அனுபவம் வேண்டாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளோட்ஸ் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஆக்சென்ச்சர் (Accenture) உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

it jobs job

நம் நாட்டில் சென்னை, பெங்களூர் உள்பட பல முக்கிய நிறுவனங்களில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அக்சென்ச்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ் 2 முடித்து டிகிரி அல்லது இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் 0 -1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும் அனுபவம் இல்லாதவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு சி, சி++, பைத்தான் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அனுபவம் கொண்டவர்கள் என்றால் ML.AI, பைத்தான் டூல் செயின்ஸ் தெரிந்திருக்க வேண்டும். லைப்ரேரிஸ் எனப்படும் Nupy, Scipy, pandas, மைக்ரோகன்ட்ரோலர் - ஏஆர்எம் /எஸ்டிஎம்32ரு உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

சாப்ட்வேர் டெவலப்மன்ட் மெத்தடலாஜிஸ் எனப்படும் Agile or Scrum தெரிந்திருக்க வேண்டும். ரியல் டைம் ஆபரேட்டிங் சிஸ்டமில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.. புதிய டெக்னாலஜிஸை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் பற்றி தேர்வாகும்போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை என்பதால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பிப்பது நல்லது. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+