அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே விண்ணப்பம் அனுப்புங்க!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம்(Anna University) 312 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகம் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Teaching Faculty பணியிடத்துக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க M.E, Ph.D, Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.
விண்ணபிப்பதற்கான வயது வரம்பு 24-35 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 27.10.2021 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
மேலும், The Registrar, Anna University, Chennai - 600025 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பியும் வைக்கலாம். எழுத்துத் தேர்வு, தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் தனிப்பட்ட நேர்காணல் உள்ளிட்ட நடைமுறைகளின்படி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மற்றொரு வேலைவாய்ப்பு
இதேபோல் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(Vellore Institute of Technology)) Junior Research Fellow என்ற பணியிடத்துக்கு ஒருவரை தேர்வு செய்ய உள்ளது. இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் M.E, M.Tech, M.Sc முடித்திருக்க வேண்டும்.
இந்த பணியிடத்துக்கு 21.10.2001-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், திறமையும் மிக்கவர்கள் www.vit.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.31,000-35,000 சம்பளம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களை www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். வேலூர் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications